Published : 27 Sep 2019 08:22 AM
Last Updated : 27 Sep 2019 08:22 AM

டெங்கு காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு; மாங்காடு பகுதியில் வீடுதோறும் சுகாதார ஆய்வு பணி தீவிரம்: 7 டன் பழைய டயர்கள் பறிமுதல்

மாங்காடு

மாங்காடு பகுதியில் டெங்கு காய்ச்சலால் மாணவி இறந்ததை தொடர்ந்து, அந்த பகுதியில் வீடு தோறும் ஆய்வு பணிகளை சுகாதாரத் துறையினர் தீவிரப் படுத்தி உள்ளனர்.

மாங்காடு பேரூராட்சிக்கு உட் பட்ட ராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பிரித்திகா(11) என்ற 9-ம் வகுப்பு மாணவிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த சம்பவத்தையடுத்து மாங்காடு பேரூராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து தீவிர டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலவேம்பு கஷாயம்

மருத்துவக் குழுவினர் வீடு, வீடாகச் சென்று கொசு புழுக்கள் உருவாகும் நிலையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர். மேலும் காய்ச்சல் யாருக்காவது உள்ளதா என்பதைக் கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். ஆங்காங்கே நிலவேம்பு கஷாயமும் கொடுக்கப்பட்டது.

மேலும், நரிவனம் சாலையில் இயங்கிவந்த பழைய டயர் குடோனைக் கண்டறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அங்கிருந்து 7 டன் பழைய டயர்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த னர். வீடுகளில் திறந்தவெளியில் தண்ணீர் பிடித்து வைத்து டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் நிலையில் இருந்த பேரல்களையும் பறிமுதல் செய்தனர்.

100-க்கும் மேற்பட்ட பணியாளர்

குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதி களில் இருந்து வரவழைக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட டெங்கு கொசுப்புழு தடுப்பு பணியாளர்கள் பல இடங்களில் ஆய்வு செய்தனர். வீடுகள் மற்றும் தெருக்கள் தோறும் கொசு மருத்தும் அடிக்கப் பட்டது. குன்றத்தூர் வட்டார மருத்துவ அலுவலர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மருத்துவ அதிகாரிகள் பலர் இப்பணியில் ஈடுபட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x