பிரதமர் - சீன அதிபர் மாமல்லபுரம் வருகையை ஒட்டி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்தில் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Updated on
1 min read

மாமல்லபுரம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகி யோர் இருதரப்பு முக்கிய பேச்சு வார்த்தைக்காக, வரும் அக்டோபர் மாதம் மாமல்லபுரம் வர உள்ளனர்.

இதனால், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸார் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடற்கரை கோயில் மற் றும் கோயிலைச் சுற்றியுள்ள வளாகங்களை தூய்மைப்படுத்தி கற்கள் பதிப்பது, கடற்கரை கோயிலில் உள்ள சிற்பங்களை சுத்தப்படுத்துவது ஆகிய பணி களை தொல்லியல் துறை மேற் கொண்டுள்ளது.

சுழற்சி முறையில் பாதுகாப்பு

மேலும், பிரதமர் மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகை யிலும் முகப்பு பகுதியை அழகு படுத்துவதற்காக 2 யானை சிலைகளுடன் கூடிய புத்தர் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரத்தில் உள்ள பாறைக்குன்றுகள் மற்றும் பாறைக் குன்றின் மீதுள்ள முட்புதர்கள் ஆகிய பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் நவீன கருவி களைக் கொண்டு சோதனை மேற்கொண்டுள்ளனர். இப்பணி களில், சுழற்சி முறையில் வெடி குண்டு நிபுணர்கள் ஈடுபட்டுள் ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in