

நாகர்கோவில்
திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற் காக, கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து, இரு மாநில போலீஸ் அணி வகுப்பு மரியாதைக்கு பின்னர் சுவாமி விக்ரகங்கள் நேற்று ஊர்வ லமாக புறப்பட்டுச் சென்றன.
திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி யின்போது பத்மநாபபுரம் அரண் மனையில் நவராத்திரி விழா சிறப் பாக கொண்டாடப்பட்டு வந்தது. திருவிதாங்கூரின் தலைநகரம் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னர், இவ்விழா அங்கு நடை பெறுகிறது. அப்போது முதல், பத்ம நாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம் மன், வேளிமலை முருகன் ஆகிய கோயில்களின் விக்ரகங்கள் ஆண்டு தோறும் நவராத்திரி விழாவில் பங் கேற்க திருவனந்தபுரத்துக்கு ஊர்வ லமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பாரம்பரிய நிகழ்வு
பத்மநாபபுரம் அரண்மனையில் பாதுகாக்கப்பட்டு வரும் திருவிதாங் கூர் மன்னரின் உடைவாளை மாற் றும் பாரம்பரிய நிகழ்ச்சி அரண் மனை உப்பரிகை மாளிகையில் நேற்று காலை நடைபெற்றது. அரண் மனை அதிகாரி அஜித்குமார் வாளை எடுத்து, கேரள அமைச்சர்கள் கடனம்பள்ளி ராமச்சந்திரன், கன கம்பள்ளி சுரேந்திரன் ஆகியோரி டம் வழங்கினார். பின்னர், கன்னி யாகுமரி மாவட்ட இந்து அற நிலையத்துறை இணை ஆணையர் அன்புமணியிடம் உடைவாள் வழங்கப்பட்டது.
அரண்மனையில் சிறப்பு பூஜை களுக்கு பின்னர், தேவாரக்கட்டு சரஸ்வதிதேவி விக்ரகம் அலங்கரிக் கப்பட்ட யானை மீது வைத்து ஊர்வலமாக திருவனந்தபுரம் நோக்கி புறப்பட்டது. சுசீந்திரம் முன் னுதித்த நங்கை அம்மன், வேளி மலை முருகன் விக்ரகங்கள் தனித் தனி பல்லக்குகளில் புறப்பட்டன. தமிழக, கேரள போலீஸார் அணி வகுப்பு மரியாதை அளித்தனர்.
கேரளபுரம், அழகியமண்டபம் வழியாக குழித்துறை மகாதேவர் கோயிலை நேற்று இரவு ஊர்வலம் சென்றடைந்தது. வழிநெடுக பக்தர்கள் மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.
குழித்துறையில் இருந்து இன்று காலை புறப்படும் சுவாமி விக்ரகங்களுக்கு, கேரள எல்லை யான களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் பிரம்மாண்ட வரவே ற்பு அளிக்கப்படுகிறது. இரவு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோயிலை சுவாமி விக்ரகங்கள் சென்றடைகின்றன. பின்னர், நாளை (28-ம் தேதி) காலை அங்கிருந்து புறப்பட்டு மாலை திருவனந்தபுரம் செல்கின்றன.
10 நாள் பூஜை
அங்கு கோட்டைக்களம் நவராத் திரி மண்டபத்தில் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவியும், ஆரியசாலை சிவன் கோயிலில் வேளிமலை முரு கனும், செந்திட்டை பகவதியம்மன் கோயிலில் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மனும் நவராத்திரி பூஜையில் வைக்கப்படுகின்றனர்.
29-ம் தேதி முதல் 10 நாட்கள் நவராத்திரி பூஜையில் பங்கேற்ற பின்னர், சுவாமி விக்ரகங்கள் மீண்டும் கன்னியாகுமரி மாவட்டம் கொண்டுவரப்படும்.