Published : 26 Sep 2019 05:14 PM
Last Updated : 26 Sep 2019 05:14 PM

தமிழகத்தில் ரூ.1,481 கோடி மதிப்பில் தொழில் திட்டங்களுக்கு அடிக்கல்; 15 நிறுவனங்கள் ரூ.5,574 கோடி முதலீடு: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து; 29 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

சென்னை

தொழில் துறை சார்பில் ரூ.5,573 கோடியே 89 லட்சம் முதலீட்டில் 28,566 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 15 தொழில் நிறுவனங்களுடன் முதல்வர் பழனி சாமி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதுதவிர, ரூ.1,480 கோடியே 70 லட்சத்தில் 5 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பு: சென்னை சோழிங்கநல்லூரில் ரூ.336 கோடி முதலீட்டில் 16 ஆயிரம் பேருக்கு வேலையளிக்கும் வகையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சேவை திட்டத்துக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் ஹிராநந்தானி கிரீன் பேஸ் பூங்காவில் ரூ.626 கோடி முதலீட்டில் 500 பேருக்கு பணி அளிக்கும் வகையில் வெஸ் டாஸ் நிறுவன காற்றாலை விசை யாழி (wind turbines) உற்பத்தி திட்டத்துக்கும் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது.

மேலும், சென்னை எண்ணூரில் ரூ.1,529 கோடியே 57 லட்சம் முத லீட்டில் 6,600 பேருக்கு வேலை யளிக்கும் வகையில் வெங்கடேஷ் கோக் FTWZ நிறுவன சிறப்பு வர்த்தக கிடங்கு மண்டலம், எஸ்ஹெச்வி எனர்ஜி நிறுவனத்தால் ரூ.590 கோடியில் 500 பேருக்கு பணி வழங்கும் வகையில் கோவை-கள்ளிப்பாளையத்தில் அமையும் எரிவாயு நிரப்பும் மையம், தூத்துக்குடியில் எரிவாயு இறக்கு மதி முனைய விரிவாக்கம் ஆகிய வற்றுக்கு ஒப்பந்தம் மேற்கொள் ளப்பட்டது.

இதுதவிர, வேலூர் மாவட்டம் காட்பாடியில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு வெடிமருந்து நிறு வனத்தை மீண்டும் தொடங்கும் வகையில் மத்திய அரசின் நவரத்தின நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிட். நிறுவனம் குத்தகை அடிப்படையில் ரூ.50 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகை யிலான திட்டம் உட்பட 15 நிறுவனங் களுடன் ரூ.5,573 கோடியே 89 லட்சம் முதலீட்டில் 28,566 பேருக்கு வேலை அளிக்கும் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், இந்தாண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் பகுதிகளில் ரூ.121 கோடியே 12 லட்சத்தில் 1,280 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக் கும் வகையிலான 3 நிறுவனங் களின் வணிக உற்பத்தியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் அடிக்கல்

அதேபோல், 15,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம்- சிறுசேரி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் சார்பில் ரூ.900 கோடி முதலீடு உட்பட ரூ.1,250 கோடியில் 5 நிறுவனங்களின் தொழிற்பிரிவுகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டி னார்.

இந்த வகையில், தொழில் துறை சார்பில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 3 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தி தொடக்கம், 5 தொழில் நிறுவனங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மூலம் ரூ.7,175 கோடியே 71 லட்சம் முதலீடு, 45,846 பேருக்கு புதிய வேலைவாய்ப்பும் தமிழகத்தில் உருவாகி உள்ளது.

நிகழ்ச்சியில் அமைச் சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் கே.சண்முகம். தொழில்துறை செயலர் நா.முருகானந்தம், சிறப்பு செய லாளர் வி.அருண்ராய், சிப்காட் இயக்குநர் ஜெ.குமர குருபரன், தமிழ்நாடு தொழில் வெடிபொருள் நிறுவன மேலாண் இயக்குநர் சி.காமராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன செயல் இயக்குனர் கா.ப.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x