

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து மீண்டும் 5 சிறுவர் கள் நேற்று தப்பிச் சென்றனர். கடந்த 3 மாதங்களில் 5-வது முறை யாக சிறுவர்கள் தப்பிச் செல்லும் சம்பவம் நடந்துள்ளது.
செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சமூக நலத்துறையின் கீழ் சிறுவர்களுக்கான அரசு சிறப்பு இல்லம் செயல்படுகிறது. இங்கு, பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனினும், காவலர்கள் பற்றாக்குறை காரண மாக சிறுவர்கள் அவ்வப்போது தப்பி செல்வது தொடர்கதையாகி வருகிறது.
இந்த இல்லத்தில் இருந்து நேற்றும் 5 சிறுவர்கள் தப்பி சென்ற னர். இல்லத்தின் கண்காணிப்பாளர் அளித்த தகவலின்பேரில், தப்பி சென்ற சிறுவர்களை செங்கல்பட்டு போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 5-வது முறையாக சிறுவர்கள் தப்பி செல்லும் சம்பவம் அரங்கேறி யுள்ளது குறிப்பிடத்தக்கது.