

எஸ். முஹம்மது ராஃபி
ராமேசுவரம்
ராமநாதபுரத்தில் பரவலாக விளைவிக்கப்படும் பாரம்பரிய முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள் ளனர்.
இந்தியாவில் பொருள்க ளுக்கான புவிசார் குறியீடுகள் சட்டம் 1999-ம் ஆண்டு நிறைவே ற்றப்பட்டு, 2003-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம், இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.
புவிசார் குறியீடு
ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சார்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறி யீடு அளிக்கப்படுகிறது. அந்த பொருளின் பிறப்பிடம், தனித் தன் மை ஆகியவற்றை அறிய, இந்த குறியீடு உதவும்.
இதன் மூலம், சம்பந்தப்பட்ட பொருளை, வேறு யாரும் வியா பார நோக்கத்துக்காகவோ, போலி யாகவோ பயன்படுத்துவதை சட் டப்பூர்வமாக தடுக்க முடியும்.தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி என 45-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது.
இந்தியா முதலிடம்
இந்தியாவிலிருந்து மிளகாய்த் தூள், காய்ந்த மிளகாய், மிளகாய் ஊறுகாய் மற்றும் மிளகாய் பசை என அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உலக அளவில் மிளகாய் உற்பத்தி, நுகர்வு மற்றும் ஏற்றுமதியில் இந்தி யா (36%) முதலிடத்தில் உள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 20 ஆயிரம் ஹெக்டேரில் மிளகாய் சாகுபடி செய்யப்படு கிறது.
வறட்சியை தாக்குப் பிடி த்து வளரும் முண்டு மிளகா யின் தனித்தன்மையே அதன் அதி கபட்சமான காரம்தான். இதனால் முண்டு மிளகாய்க்கு உலகளவில் சந்தை வாய்ப்பு உள்ளது.
"உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு" என திருஞான சம்பந்தர் தேவாரம் பாடலிலேயே ராமநா தபுரம் முண்டு மிளகாய் பற்றி சிலாகித்து கூறி இருக்கிறார். மேலும் தமிழகத்தில் மிளகாய் உற் பத்தியில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.
மக்களவையில் விதி எண் 377-இன் கீழ் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு அளிக்க வேண்டும் எனக் கோரி க்கை விடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
விரைவில் நடவடிக்கை
மக்களவையில் நவாஸ் கனி எழுப்பிய கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் செப் டம்பர் 24-ம் தேதி பதில் அனுப்பி உள்ளது. அதன் விவரம்:
மிளகாய்த்தூள் உற்பத்தியா ளர்களிடம் ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு நல்ல வரவேற்பு உள்ளது கண்டறியப்பட்டு உள் ளது. எனவே முண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நறுமணப் பொருட்கள் வாரியத் துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு அதிகாரிகள், வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்று உரிய சான்றுகளை வழங்குவர். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.