Published : 26 Sep 2019 10:32 AM
Last Updated : 26 Sep 2019 10:32 AM

என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட தாதா மணிகண்டன்; இதுவரை நடந்தது என்ன? - பின்னணித் தகவல்கள்

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக் குப்பம் அருகில் உள்ள குயிலாப் பாளையத்தைச் சேர்ந்தவர் அமிர்த லிங்கம் மகன் தாதா மணிகண்டன் (39) இவர் மீது ஆரோவில், செஞ்சி, மயிலம், திருக்கோவிலூர், கோட்டக்குப்ப்பம், கிளியனூர், திருவண்ணாமலை, வானூர் ஆகிய காவல் நிலையங்களில் 28 வழக்குகள் உள்ளன. இவற்றில் 8 வழக்குகள் தள்ளுபடியாகியது. மீதமுள்ள 20 வழக்குகளில் வெடிகுண்டு வீசிய வழக்கு, கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு, பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் ஆரோ வில் காவல் நிலையத்தில் 2009ம் ஆண்டு பதியப்பட்ட கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையில் உள்ளது.

தாதா மணிகண்டன் என்க வுண்டர் குறித்து காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது,

பைக்குகள் மற்றும் ஆட்டோக் களைத் திருடி விற்பது என ஆரம் பித்த மணிகண்டனிடம் ஏற்பட்ட தொழில் போட்டிக் காரணமாக ராஜ்குமார், பூபாலன் ஆகியோர் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன.

இந்த வழக்குகளில் ராஜ் குமார் கைதாகி சிறைக்கு சென்றார். பூபாலன் வழக்கு களை எதிர்கொண்டிருந்தார். மணிகண்டன் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாகவே இருந்தார்.

நீதிமன்றம் மூலம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொண்டு அவரை கண் காணித்து வந்தோம்.

இதற்கிடையே ரவுடி பூபாலன் காவல்துறையிடம் மனு கொடுத்து, திருந்தி வாழத் தொடங்கியபோது, மணிகண்டனின் தம்பிகள் ஏழுமலை மற்றும் ஆறுமுகம் இருவரும் மணிகண்டனுக்கு வலதுகரமாக நின்றார். அப்போது, சென்னையைச் சேர்ந்த செவிலியர் ப்யூலா என்கிற ஆனந்தியை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் திருவண்ணாமலையில் புதிதாக வீடு கட்டி மனைவியுடன் வசிக்கத் தொடங்கினார்.

2015ம் ஆண்டு தன் மனை வியின் அறிவுரையின்படி விழுப்பு ரம் எஸ்.பி அலுவலகத்தில் திருந்தி வாழப்போவதாக மணிகண்டன் மனு அளித்தார். அதிலிருந்து சரியாக ஒரே வாரத்தில் இவரின் தம்பி ஆறுமுகத்தை முன்விரோதத்தால் ராஜ்குமார் தரப்பினர் கொலை செய்தனர்.

அதன்பிறகு மணிகண்டன், மீண்டும் ரவுடியிசத்தைக் கையில் எடுத்தார். தனது பரம எதிரியான ராஜ்குமாருக்கு ஆதரவாகச் செயல்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் ரிலையன்ஸ் பாபு என்பவரைத் தனது நண்பன் சங்கர் கணேஷ் மூலம் படுகொலை செய்தார்.

அடுத்த 10 நாட்களில், மணிகண்டனின் எதிர்தரப்பு ஆளான காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை செய்யப்பட்டார். கொலை, கொள்ளை எனத் தனது பழைய தொழிலை மீண்டும் கையிலெடுத்தார் மணிகண்டன். இதற்கிடையில், இவரது இரண் டாவது தம்பியான ஏழுமலை ஒரு வழக்கில் கைது செய்யப் பட்டு கடலூர் சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். ஆனால் கடந்த ஆண்டு, கடலூர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

பிடிவாரண்டில் மணிகண்டனை கைது செய்ய முனைப்பில் இருந்த காவல்துறை நேற்று முன்தினம் சென்னை கொரட்டூரில், அவரை 'என்கவுண்ட்டர்' செய்தனர். போலீ ஸாரை கத்தியால் தாக்கி விட்டுத் தப்பிக்க முயற்சி செய்ததால், என்கவுண்ட்டர் செய்ய நேரிட்ட தாக காவல்துறையினர் தெரிவிக்கி ன்றனர்.

மணிகண்டன் சுட்டுக் கொல் லப்பட்டதால் ஆரோவில், பெரியமுதலியார் சாவடி, குயிலாப் பாளையம் பகுதியில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x