தனிக்கட்சி தொடங்கும் கண்ணன் கடந்து வந்த பாதை

புதிய கட்சி தொடங்கிய கண்ணனைச் சந்தித்து வாழ்த்து கூறும் தொண்டர்கள். படம்: எம்.சாம்ராஜ்
புதிய கட்சி தொடங்கிய கண்ணனைச் சந்தித்து வாழ்த்து கூறும் தொண்டர்கள். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
2 min read

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி

புதுச்சேரி அரசியலில் முக்கியத் தலைவர்களில் கண்ணனும் ஒரு வர். இவர் காங்கிரஸில் தனது அரசி யலை தொடங்கினார்.

கடந்த 1985ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சுகாதார மற்றும் தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற் றார். அதையடுத்து 1991ம் ஆண்டு காங்கிரஸ் வெற்றி பெற அவர் நடத்திய பாத யாத்திரையும் முக்கிய மானதாக அமைந்தது. அதன் பின்பு 96ல் தமாகாவில் புதுச்சேரி தலைவ ரானார். 6 தொகுதிகள் வென்றதால் உள்துறை அமைச்சரானார்.

2000ல் திமுக - தமாகா கூட்டணி உடைந்தது. அதன் பின்னர் காங்கி ரசுடன் கூட்டணி அமைத்து அதே பதவியை தக்க வைத்துக் கொண் டார். அப்போது தேனீ ஜெயக் குமாருக்கும், கண்ணனுக்கும் மோதல் ஏற்பட்டதன் காரணமாக கண்ணன் அமைச்சர் பதவியை இழந்தார்.

இதனால் 2001ல் புதுச்சேரி மக் கள் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி, போட்டியிட்டு 4 தொகுதி களில் அவரது கட்சி வென்றது. பின்னர் காங்கிரசுடன் இணைந்து தனது ஆதரவாளர் லட்சுமி நாராய ணனுக்கு அமைச்சர் பதவி பெற் றுக் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து 2006ல் மீண் டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கி ரஸ் கட்சியைத் தொடங்கி, அதிமுக வுடன் கூட்டணி வைத்து போட்டி யிட்டார். அதில் அவரது ஆதரவா ளர்கள் 3 பேர் வெற்றி பெற்றனர்.

2009ல் நடைபெற்ற நாடாளுமன் றத் தேர்தலின் போது மீண்டும் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியை காங்கிரஸுடன் இணைத் தார். காங்கிரஸ் வேட்பாளராக களமி றங்கிய அப்போதைய முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயண சாமியின் வெற்றிக்கு பாடுபட்டார். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அவருக்கு மாநிலங்களவை உறுப் பினர் பதவியும் வழங்கியது.

ராஜ்யசபா எம்பியாக கண்ணன் செயல்பட்ட நிலையில் கட்சியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். கடந்த 2014ல் மக்களவை எம்பி தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்யவில்லை.

அதைத்தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி அதிமுகவில் இணைந்தார். அதிமுக தேர்தல்பிரிவு செயலராக இருந் தார். அதிமுக சார்பில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பு இழந்தார். இந்நிலையில் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தற்போது சசிகலா சட்டப்பேரவை கட்சித்தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அதிமுகவிலிருந்து விலகினார்.

அதையடுத்து அரசியல் நிகழ் வுகளில் பங்கேற்காமல் இருந்தார். மீண்டும் பாஜகவில் இணைவார் என்று பேச்சு எழுந்தது. தொடர்ந்து தனிக்கட்சி தொடங்க ஆதரவா ளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யாருக்கும் கண்ணன் ஆதரவு தெரிவிக்க வில்லை. விரைவில் புதுக்கட்சி தொடங்க உள்ளதாக தெரிவித்தி ருந்தார்.

இந்நிலையில், புதிய கட்சி தொடங்கியுள்ளதாக கண்ணன் அறிவித்துள்ளார்.

கட்சி மாற்றம், புதுக்கட்சி உரு வாக்கம் என தொடர் நடவடிக் கைகளை மக்கள் ஏற்பார்களா? என்று கண்ணனிடம் கேட்டதற்கு, "காமராஜர் காலத்திலேயே காங் கிரஸ் கட்சிக்கு வந்தேன். அப் போது இருந்த காங்கிரஸார் புதுச் சேரியில் யாரும் தற்போது இல்லை. இந்திராகாந்தியே காங்கிரஸை நான்கு முறை உடைத்துள்ளார். அவர் தலைமையில் செயல் பட்டவன் நான். நானாக எக்கட்சிக் கும் செல்லவில்லை." என்று குறிப் பிட்டார்.

'மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள்; அதன் பின் பாஜக வுக்கு செல்லாமல் தனிக்கட்சி தொடங்கியது ஏன்?' என்று கேட்ட தற்கு, "பிரதமர் மோடி எனக்கு எதிரி அல்ல. அவருடன் ஒத்து போகும் கருத்துகளுண்டு. பிறந்தநாள் என்பதால் வாழ்த்தினேன்" என்றார்.

பேனர் விவகாரம், மீண்டும் இந்தி எதிர்ப்பு போன்ற தற் போதைய பிரச்சினை குறித்து கேட் டதற்கு, "தமிழகத்தை விட பேனர் பிரச்சினை புதுச்சேரியில்தான் அதிகம். இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை திணித்தால் நான் கட்டாயம் எதிர்ப்பேன். இந்தி விஷயத்தில் எதிர்க்கும் அரசியல் வாதிகள் குழந்தைகள் வெளி நாட்டில்தான் படிக்கின்றனர். அத் துடன் அவர்களில் பலர் சிபிஎஸ்இ பள்ளிகளும் நடத்துகின்றனர். இந்தி விஷயத்தை பாஜகவினர் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை.

இந்தி பிரச்சார சபா காங் கிரஸ் ஆட்சிகாலத்தில்தானே வந் தது. 67ல் இந்தி எதிர்ப்பு போராட் டத்துக்கு யார் காரணம்?'' என்றும் குறிப்பிட்டார்.'மோடி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தீர்கள்; அதன் பின் பாஜகவுக்கு செல்லாமல் தனிக்கட்சி தொடங்கியது ஏன்?' கட்சி மாற்றம், புதுக்கட்சி உருவாக்கம் என தொடர் நடவடிக்கைகளை மக்கள் ஏற்பார்களா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in