காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முகமது திட்டம்; மோடி, அமித் ஷாவுக்கு தீவிரவாதிகள் குறி: உளவுத்துறை எச்சரிக்கை; பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு

பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலமாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களை பஞ்சாப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலமாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்களை பஞ்சாப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Updated on
2 min read

புதுடெல்லி

இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் பாகிஸ் தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஏராள மான தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்ப தாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்களில் உள்ள விமானப் படை தளங்களிலும், ராணுவ முகாம் கள் உள்ளிட்ட பல்வேறு பகுதி களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர் களை கொல்லவும் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அவர்களுக்கான பாதுகாப்பும் பன் மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப் பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் 5-ம் தேதி நீக்கியது. அத்துடன், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது.

இந்தியாவின் இந்த நடவடிக் கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், காஷ்மீர் விவ காரத்தை சர்வதேச பிரச்சினை யாக மாற்றும் முயற்சியில் இறங் கியது. ஆனால், உலக அரங்கில் பாகிஸ்தானின் குரலுக்கு எந்த நாடும் செவிசாய்க்காததால், அதன் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், தமது ராணுவத்தின் மூலமாக காஷ்மீர் எல்லைப் பகுதிகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கும், இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், பாகிஸ் தானில் இருந்து ஏராளமான தீவிர வாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாகவும், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பயங்கர தாக்குதல் நடத்த அவர் கள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத் துள்ளன.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரிகள் கூறியதாவது:

பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள், சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் காஷ்மீர் எல்லைக்கு மிக அருகே இருப்பதாக உளவு அமைப்புகள் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரிவித்தன.

காஷ்மீரில் உள்ள நகர், ஜம்மு, அவந்திபோரா ஆகிய பகுதி களில் அமைந்துள்ள விமானப் படை தளங்களிலும், பஞ்சாபில் உள்ள பதான்கோட் விமானப் படை தளத்தின் மீதும் அவர்கள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்தன.

இதையடுத்து, அந்த விமானப் படை தளங்களிலும், வட இந்திய மாநிலங்களில் இருக்கும் விமானப் படை தளங்கள், ராணுவ, துணை ராணுவ முகாம்களிலும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.

ட்ரோனில் ஆயுதங்கள்...

இந்நிலையில், இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக, பாகிஸ் தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப் பின் மூலம் பஞ்சாபில் உள்ள காலிஸ் தான் தீவிரவாதிகளுக்கு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் ஆயுதங்கள் விநியோகம் செய்யப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பஞ்சாபின் தரன் தாரன் மாவட்டத்தில் கடந்த 22-ம் தேதி போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த காரினை சோதனை செய்தபோது, அதில் ஏ.கே. 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

காலிஸ்தான் தொடர்பு

இதன் தொடர்ச்சியாக, காரில் இருந்தவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா சிறிய விமானங் கள் மூலமாக கடந்த 10 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், கையெறி குண்டு கள், சாட்டிலைட் செல்போன்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் அவர் களுக்கு விநியோகிக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசா ரணையின் அடிப்படையில், காலிஸ் தான் தீவிரவாதிகள் 5 பேரை போலீ ஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ஆளில்லா விமானங்கள் மூலமாக விநியோகிக் கப்பட்ட 80 கிலோ எடைகொண்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட் களையும் போலீஸார் கைப்பற்றி னர். இதுதவிர, ரூ.10 லட்சம் மதிப் பிலான கள்ள நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆயுதங்கள் யாவும், பஞ்சா பில் உள்ள சில வழிபாட்டு தலங் களில் தாக்குதல் நடத்துவதற்காக வும், காஷ்மீரில் உள்ள தீவிர வாதிகளுக்கு வழங்குவதற்காகவும் விநியோகிக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படு கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் ராணு வத்தினரும், துணை ராணுவத் தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் 24 மணிநேர மும் ஹெலிகாப்டர்கள் மூலமாக ராணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கும் தீவிரவாதி கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் ராணுவ உளவு அமைப்பு அண் மையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிரவாதிகளின் தொலைபேசி உரையாடலை இடைமறித்து கேட்ட போது இந்த தகவல் தெரியவந்த தாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த எச்சரிக்கையின் தொடர்ச்சி யாக, மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு பல அடுக்கு பாதுகாப்பு வழங்கப் பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப் பட்டுள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் 60 பேர், காஷ்மீருக்குள் நுழைவதற்காக எல்லைப் பகுதியில் காத்திருப்ப தாக ஐ.பி. உளவு அமைப்பு நேற்று தெரிவித்துள்ளது. இதனால், காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இரவு - பகலாக ராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரு கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in