Published : 26 Sep 2019 08:41 AM
Last Updated : 26 Sep 2019 08:41 AM

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவும் ‘இரட்டை நிர்வாக முறை’: மருத்துவர்கள் பற்றாக்குறையால் கர்ப்பிணிகள் அவதி 

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

தமிழகத்தில் வீடுகளில் நடக்கும் பிரசவத்தின்போது நிகழும் தாய், சேய் மரணத்தைத் தடுக்க ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப் பட்டன. மாநகராட்சி, நகராட்சிக் குட்பட்ட சுகாதார நிலையங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டிலும், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சுகாதாரத் துறை துணை இயக்குநர் கட்டுப் பாட்டிலும் செயல்பட்டு வந்தன.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களே தகுதி அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியா ளர்களை நியமனம் செய்து அவர் களே ஊதியமும் வழங்கி வந்தனர்.

சுகாதார அலுவலர்கள் கட்டுப்பாடு

2012-ம் ஆண்டு முதல் பணி நியமன அதிகாரம் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டுக்குச் சென் றது. ஆனால், இந்த ஆரம்ப சுகா தார நிலையங்களின் நிர்வாகம் மாநகராட்சி, நகராட்சி ஆணை யர்கள் மற்றும் அதன் சுகாதார அலுவலர்களின் கட்டுப்பாட்டி லேயே உள்ளன.

சுகாதாரத்துறை, தங்கள் கட்டுப் பாட்டில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மட்டுமே முக்கியத்தும் கொடுப்பதால் மாந கராட்சி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய பணி நியம னத்துக்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் மருத்துவர்கள், செவிலி யர்கள், மருந்தாளுநர்கள் பற்றாக் குறை அதிகரித்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயா ளிகள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. பிரசவமும் அதிக ளவு நடக்கிறது. மருத்துவர் இல்லாத தால் இரவு நேரத்தில் செவிலி யர்களே பிரசவம் பார்க்கும் அவலம் ஏற்படுகிறது. இதனால் சில சமயங் களில் பிரசவத்துக்கு வரும் கர்ப்பி ணியின் மரணம் மறைக்கப் படுகிறது.

கர்ப்பிணி உயிரிழப்பு

கடந்த வாரம் மதுரை கோ.புதூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலை யத்தில் இரவில் மருத்துவர் பிரசவத் துக்கு வராததால் கர்ப்பிணி உயிரி ழந்த சம்பவம் நடந்தது. ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கர்ப்பிணிகளைப் பெரும்பாலும் அருகில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குப் பரிந்துரை செய்கின்றனர். மாந கராட்சி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதலுதவி மையங் கள்போல் பெயரளவுக்கு செயல் படுகின்றன.

இது குறித்து தமிழக சுகாதாரத் துறை மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

மாநகராட்சி, நகராட்சிகள் 2012-ம் ஆண்டுக்கு முன்பு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நியமனம் செய்த மருத்துவர்கள், செவிலி யர்கள், மருந்தாளுநர்கள் படிப் படியாக ஓய்வுபெற்று வருகின் றனர். இவர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்காமல் அயல் பணி அடிப்படையில் மருத்து வர்களை மாநகராட்சி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுகாதாரத் துறை அனுப்புகிறது.

மதுரை மாநகராட்சியில் 31 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வெறும் 27 மருத்துவர்களே பணி புரிகின்றனர். இவர்களால் நோயா ளிகளுக்கு முழுமையான மருத்துவ சேவை வழங்க முடியவில்லை. அதனால், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீடிக்கும் இரட்டை நிர்வாக அதிகார முறையை நீக்கி ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் சுகாதாரத் துறை அல்லது மாநகராட்சி, நகராட்சி வசம் ஒப்படைக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அவுட்சோர்ஸிங் முறை

சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘இரட்டை நிர்வாக முறையை ஒழிப்பது அரசின் கொள்கை முடிவு. கவுன்சிலிங் மூலம் ஆரம்ப சுகாதார நிலையங் களில் சுகாதாரத்துறை காலிப் பணியிடங்களுக்கு புதிய மருத் துவர் நியமிக்கும் வரை, உள்ளாட்சி அமைப்புகள், தற்காலிமாக அந்த பணியிடங்களுக்கு மருத்துவர் களை, செவிலியர்களை ‘அவுட் சோர்ஸிங்’ முறையில் நியமித்துக் கொள்ளலாம் என்று அறிவுரை வழங்கியுள்ளோம்.

ஆனால், அவர்கள் மருத்து வர்களை நியமிக்காமல் மருத்துவ சேவை பாதிக்கப் படுவதாக கூறுவது எந்தவிதத்தில் நியாயம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x