

சென்னை
சிபிஎஸ்இ பள்ளிகளில் இடஒதுக் கீடு முறையை பின்பற்றாவிட் டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டை யன் கூறினார்.
சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன், இயக்குநர் ச.கண் ணப்பன் ஆகியோர் பங்கேற்ற னர். கூட்டத்துக்கு பின் அமைச் சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சிபிஎஸ்இ பள்ளிகள் அதி கரித்து வருகின்றன. இதனால் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு புதிதாக பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கக்கூடாது என்று சிபிஎஸ்இ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் பல் வேறு நிபந்தனைகளை கொண்டு வரவும், அதை புதிய பள்ளிகளுக்கு வழங்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த விதிமுறை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும். விதிகளுக்கு உட்பட்டு பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க பள்ளிகள் முன்வரவேண் டும். இல்லையெனில் சம்பந்தப் பட்ட பள்ளிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டு அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர் களுக்கும் நன்கு பயிற்சி அளிக்கப் பட்டுள்ளது. எனவே, நீட்தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.