

சென்னை
மின்வாரியம் உயர்த்த உத்தேசி த்துள்ள மின்இணைப்புக் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத் தில் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தற்போது விதிக் கும் மின் இணைப்புக் கட்டணம், பிணைவைப்புத் தொகை, மின் அளவீட்டுக் கருவியின் வாடகை, மறு இணைப்புக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை உயர்த்த திட்டமிட் டுள்ளது. இதன்படி, ரூ.1,600-ல் இருந்து ரூ.6 ஆயிரம் வரை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீது, பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நேற்று நடை பெற்றது. இதில், ஆணையத்தின் தலைவர் மு.சந்திரசேகர், உறுப் பினர்கள் த.பிரபாகர ராவ், கி.வெங் கடசாமி, செயலாளர் சு.சின்னராஜலு ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட் டத்தில் பங்கேற்றவர்கள் பேசிய தாவது:
மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ எஸ்கே.மகேந்திரன்: ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை, தொழில் நசிவு, விவசாய பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, இக்கட்டண உயர்வு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இதை உடனடியாக கைவிட வேண்டும்.
சிஐடியு மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.எஸ். சுப்பிரமணியன்:
மின்வாரியம் தனது பொறுப்பற்ற செயல்கள் காரணமாக இழப்பை சந்தித்து வருகிறது. எண்ணூரில் 660 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையம் அமைக்க கடந்த 2014-ம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றுடன் ஒப் பந்தம் செய்தது. ரூ.3,922 கோடி மதிப் பிலான பணியில் ரூ.1,600 கோடி மதிப்பிலான பணிகள் நிறை வடைந்த நிலையில், அந்நிறுவனம் திவால் ஆனது. இதையடுத்து, வேறொரு நிறுவனத்துக்கு ரூ. 7,160 கோடி மதிப்பில் அமைக்க டெண்டர் விடப்பட்டது. இதனால், மின்வாரி யத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டது.
கோவை, தென்னிந்திய மில் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் கணேஷ்: ஏற்கெனவே பல்வேறு காரணங் களால் 200-க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந் நிலையில், இந்தக் கட்டண உயர்வு தொழில் துறையை மேலும் பாதிப்படையச் செய்யும்.
ஏ.பி.சீனிவாசன், மயிலாப்பூர்: பல இடங்களில் நடக்கும் மின் திருட்டுகளை தடுத்து நிறுத்தி னாலே, வாரியத்துக்கு பல ஆயிரம் கோடி மிச்சமாகும்.
எஸ்.வெங்கடேசன், கடலூர்: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்துக்கான மானி யத்தை மின்வாரியத்துக்கு தமிழக அரசு வழங்குகிறது. எனவே, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால் மின்வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை.
ஆர்.வி.கிரி, கடலூர்: யாரும் கேட்காமலேயே நுகர்வோருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங் கப்படுகிறது. ஒருபக்கம் இலவச மின்சாரத்தை வழங்கி விட்டு, மறு புறம் மின்இணைப்பு உள்ளிட்ட வற்றுக்கு மறைமுகமாக கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, இக்கட் டண உயர்வை கைவிட வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் செயலாளர் வி.ராமா ராவ்: கட்டணத்தை குறைந்தபட்சம் 10 முதல் 20 சவீதம் வரை வேண்டுமானால் உயர்த்தலாம். ஆனால், ஒரேடியாக 400, 500 சதவீதம் உயர்த்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.