

சென்னை
ரயில்வேயின் தனியார்மய திட் டத்தை முறியக்க போராடுவோம் என எஸ்ஆர்எம்யு பொதுச்செய லாளர் கண்ணையா, டிஆர்இயு துணை பொதுச்செயலாளர் மனோ கரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில்வே பணி மனையில் நேற்று கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 30 வருட பணிநிறைவு பெற்றவர்களுக்கு கட்டாய ஓய்வு, ரயில்வே துறையை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கண்டித்து கண்ணையா பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரயில்வே துறையில் புதுடெல்லி - லக்னோ இடையே முதல் தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது. இதில், குழந்தையாய் இருந்தாலும் கூட முழு கட்டணம் செலுத்தும் அபா யம் உள்ளது. இதைத் தொடர்ந்து 15 விரைவு ரயில்கள் தனியாருக்கு விடப்பட உள்ளன. இதில், தமிழ கத்தில் இருந்து 5 விரைவு ரயில் களும் இடம் பெற்றுள்ளன. இதை கண்டித்து எஸ்ஆர்எம்யு சார் பில் ரயில்வே கோட்ட தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.
இதுதொடர்பாக பொதுமக்களு டன் இணைந்து போராட்டத்தை முன்னெடுக்கவும் டெல்லி சென்று முறையிடவும் திட்டமிட்டு உள் ளோம். தனியார்மயமாக்கலால், தொழிலாளர்களுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறினாலும் இளை ஞர்கள் ரயில்வே துறையில் வேலையில் சேருவதற்கான வாய்ப் புகள் இல்லாமல் போகும் அபா யம் ஏற்பட்டுள்ளது. எனவே இதை கண்டிக்கும் வகையில், நாங் கள் தொடர்ந்து கண்டன கூட்டங் களை நடத்திக் கொண்டிருக் கிறோம். ரயில்வேயின் தனியார் மய திட்டத்தை முறியடித்திட தொடர்ந்து போராடுவோம். இவ் வாறு அவர் கூறினார்.
டிஆர்இயு துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறிய தாவது:
நூறு நாட்கள் செயல் திட்டத்தில் 2 தனியார் ரயில்கள் என ரயில்வே வாரியம் அறிவித்தது. அடுத்தாக, 150 தனியார் ரயில் கள் இயக்க இருப்பதாக தெரிவித் துள்ளது. பல ராஜதானி, சதாப்தி, தூரந்தோ போன்ற பிரீமியம் ரயில் களும் டபுள் டெக்கர், தேஜாஸ் இன்டர்சிட்டி, தொலைதூர விரைவு ரயில்களும் லாபத்தில் இயங்கி வரு கின்றன. லாபகரமான இயங்கு வதை தனியாரிடம் ஒப்படைத்து விட்டால், நஷ்டத்தில் இயங்கும் குறைந்த கட்டண பாசஞ்சர் ரயில்கள் தொடர்ந்து இயக்கும் வாய்ப்பு இல்லை.
அவசர செயற்குழு
மேலும், தனியார் ரயில்களுக்கு பயணச்சீட்டு விற்பனை மற்றும் பரிசோதனை கிடையாது. கார்டு கள், ஏ.சி மெக்கானிக்குகளை அவர் களே நியமிப்பார்கள். இதனால் அடுத்த 3 ஆண்டுகளில் 1 லட்சத்து 20 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் வேலையிழப்பார்கள். எனவே, இது குறித்து விவாதிக்க டிஆர்இயு அவ சர செயற்குழு கூட்டம் வரும் 29-ம் தேதி கூடுகிறது. மற்ற தொழிற்சங் கங்களோடு இணைந்து தனியார் மயத்துக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.