

சென்னை
சென்னை, மதுரை, கோவை உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படும் 24 விரைவு ரயில்களை தனியார்மயமாக்குவது குறித்து ரயில்வே வாரியம் ஆலோசித்து வருகிறது. புது டெல்லியில் நாளை (27-ம் தேதி) நடக்கவுள்ள ரயில்வே வாரியத்தின் கூட்டத்தில் இதுகுறித்த முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது.
ரயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது தொடர்பாக அமைக் கப்பட்ட விவேக் தேவ்ராய் குழு 2015-ம் ஆண்டு அளித்த பரிந்துரையின்படி, பயணிகள் ரயில் களை தனியாரிடம் வழங்க ரயில்வே அமைச்சகம் ஆர்வம் காட்டி வரு கிறது. இதுகுறித்து ஐஆர்சிடிசி அறிக்கை அளித்துள்ளது. இதன் படி, முதல்கட்டமாக புதுடெல்லி லக்னோ, காந்திநகர் மும்பை இடையே தனியார் ரயில் இயக்கு வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், முக்கியமான நகரங்கள் மற்றும் பிற நகரங்களை இணைக்கும் வகையில் தனியார் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தை மேற்கொள் ளும் தனியார் நிறுவனங்கள், லாபம் தரும் வழித்தடத்தை தேர்வு செய்வதோடு, கட்டணத்தையும் நிர்ணயித்துக் கொள்ளலாம். எத் தனை முறை ரயில்களை இயக்கு வது என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.
14 இன்டர் சிட்டி வழித்தடம்
முதற்கட்டமாக மும்பை, கொல் கத்தா, சென்னை மற்றும் செகந்தரா பாத்தில் சில வழித்தடங்கள் தனி யாருக்கு வழங்கப்படவுள்ளன. சென்னை - பெங்களூரு, சென்னை- கோவை, சென்னை - மதுரை, செகந்திராபாத் - விஜயவாடா, மும்பை - புனே உள்ளிட்ட மொத்தம் 14 இன்டர் சிட்டி வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படவுள்ளன. இதுமட்டுமின்றி, சென்னை - டெல்லி, சென்னை - மும்பை, சென்னை - ஹவுரா, புதுடெல்லி - மும்பை உள்ளிட்ட 10 நீண்ட தூர பயண வழித்தடங்களும் தனியார் மயமாக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இதேபோல் மும்பை, சென்னை, செகந்திராபாத், கொல்கத்தா மின்சார ரயில்களில் சில தடத்தில் தனியார் ரயில் சேவை அளிப்பது குறித்தும் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைனமிக் கட்டண முறை
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி யின் உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தனியார் ரயிலில், டிவி, ரேடியோ, வைஃபை, உணவு விநியோகம் உட்பட பல்வேறு சிறப்பு வசதிகளுடன் புதியதாக தயாரிக்கப்பட்ட ரயில்கள் இயக்கப் படவுள்ளன.
சதாப்தி அதிவிரைவு ரயில்களை விட சற்று கூடுதலாகவும் பல மடங்கு (டைனமிக் கட்டண) முறையிலும் கட்டணம் இருக்கும். ரயில் சேவை தேவையுள்ள வழித் தடங்கள், பயணிகளின் எண் ணிக்கை, ரயில்வேக்கு வருவாய் தருவதோடு, பயணிகளுக்கு கூடு தல் கட்டணச் சுமையும் இருக்கக் கூடாது என ஆய்வு நடத்தி வருகிறோம். நாளை அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.