Published : 26 Sep 2019 07:08 AM
Last Updated : 26 Sep 2019 07:08 AM

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய ஒப்புதல் இரு மாநில நதிநீர் பிரச்சினையை தீர்க்க குழு அமைப்பு: தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் முடிவு- தலைமைச் செயலாளர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை சந்திப்பு

சென்னை

திருவனந்தபுரத்தில் கேரள முதல் வர் பினராயி விஜயனை தமிழக முதல்வர் பழனிசாமி சந்தித்து, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்சினைகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இரு மாநில நதிநீர் பிரச்சினைகள் அனைத்தை யும் தீர்க்கும் வகையில் மாநிலத் துக்கு தலா 5 பேர் என 10 பேர் கொண்ட குழு அமைத்து ஆய்வு மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழகம், கேரளா இடையே முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, நெய்யாறு உள்ளிட்ட பல்வேறு நதிநீர் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன.

இந்நிலையில், கேரள நீர்ப்பாச னத் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் சமீபத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, நதிநீர் பிரச் சினைகள் குறித்து இரு மாநில முதல்வர்களும் செப்டம்பர் 25-ம் தேதி திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என முடிவு செய்யப் பட்டது. அதன்படி, கேரள முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு விமானத்தில் திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். அவருடன் சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலர் கே.சண் முகம், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் உள் ளிட்ட 17 பேர் கொண்ட குழுவினர் சென்றனர்.

திருவனந்தபுரம் கிழக்கு கோட்டை சாலையில் உள்ள மஸ்கட் ஓட்டலில் பிற்பகல் 3 மணிக்கு பேச்சு வார்த்தை நடந்தது. கேரளா சார்பில் முதல்வர் பினராயி விஜயன், அமைச் சர்கள் கே.கிருஷ்ணன் குட்டி, எம்.எம்.மணி, கே.ராஜூ, தலைமைச் செயலர் டாம் ஜோஸ் உள்ளிட்ட 17 பேர் பங்கேற்றனர். முன்னதாக, பினராயி விஜயனிடம் நதிநீர் பிரச் சினைகள் குறித்த தமிழகத்தின் முன் மொழிதல் கடிதத்தை முதல்வர் பழனிசாமி அளித்தார். அதன்பின், 2 மணி நேரம் இரு தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு மாநில முதல்வர்களும் செய்தி யாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

தமிழக முதல்வரின் முன்முயற்சி யால், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. பேச்சுவார்த்தையில் அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கேரளாவும் தமிழகமும் இரு மாநிலங்களாக இருந்தாலும், மக்கள் எந்த வித் தியாசமும் இன்றி சகோதரர்களாக உள்ளனர். இதனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணும் வகையில்தான் உள்ளது.

இன்றைய பேச்சுவார்த்தையில் ஒவ்வொரு விஷயம் குறித்தும் தனித் தனியாக தீர்மானம் எதுவும் எடுக்க வில்லை. அதே நேரத்தில் எல்லா விஷயத்திலும் பொதுவாக என்ன செய்யலாம் என ஆலோசிக்கப் பட்டது. பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்துக்கான ஒப்பந்தம் செய்து 60 ஆண்டுகளாகிவிட்டது. இந்த ஒப்பந்த்தை மறுஆய்வு செய்ய இருதரப்பிலும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. இதற்காக இரு மாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட குழு ஒரு வாரத்தில் அமைக் கப்பட்டு, அவர்கள் சந்திப்பு எப் போது நிகழும் என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும். ஆனைமலை யாறு, நீராறு, நல்லாறு, மணக்கடவு தொடர்பாகவும் அந்தக் குழுவே பேச்சுவார்த்தை நடத்தும்.

முல்லை பெரியாறு அணை விவ காரத்தை பொறுத்தவரை அங்கு மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்கு முடிவு எடுக்கப்பட் டுள்ளது. 2 மாநில தலைமைச் செய லர்களும் 6 மாதத்துக்கு ஒருமுறை கூடி பேச்சுவார்த்தை நடத்துவர். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் தொடர்பாக மின்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு தனியாக அமைக் கப்படும். இரு மாநிலம் தொடர்பான பிரச்சினைகளும் குழுவின் முக்கிய விவாதப் பொருளாக வைத்து தர்க்கம் மேற்கொள்ளாமல் அதற்கு தீர்வு எட்டப்படும். இது ஒரு நல்ல தொடக்கமாகும். தமிழக மக்களுக் கான தண்ணீர் பிரச்சினையில் முடி வெடுக்க வேண்டிய விஷயம் என்ப தால், பேச்சுவார்த்தை நடத்திய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

தமிழக முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

தமிழகம் - கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு பேச்சுவார்த்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு சுமூகமாக நடந்துள்ளது. பரம்பிக்குளம்- ஆழி யாறு திட்டம் தொடர்பாக இரு மாநிலத்திலும் தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஆய் வின் அடிப்படையில் திட்டம் நிறைவேற்றப்படும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டத்தையும் நிறை வேற்ற தனிக் குழு அமைக்கப் படுகிறது. இந்தக் குழு ஆய்வு செய்து திட்டம் நிறைவேற்றப்படும். ஆனைமலையாறு, நீராறு, நல்லாறு, சிறுவாணி பிரச்சினைகளுக்கும் இக்குழு மூலம் தீர்வு காணப்படும்.

முல்லை பெரியாறு அணையை பொறுத்தவரை ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் உள்ள பிரச்சினை குறித்து ஆய்வு செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற் கொள்ளப்படும். இரு மாநில விவ சாயிகள், மக்களுக்குத் தேவை யான நீரை முறைப்படி பங்கிட்டு வழங்கத்தான் இந்த ஆலோசனை நடந்துள்ளது. எவ்வித பாகுபாடு மின்றி கேரள, தமிழக மக்கள் ஒன்றாக இணைந்து செயல்படும் சூழல் இன்று உருவாகியுள்ளது. இன்னும் பல்வேறு சிறு பிரச்சினை களும் குழுவின் மூலம் பேசித் தீர்க்கப்படும். முதல்கட்டமாக பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளோம். இரு மாநிலங்களின் துறை செய லாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x