

பொறியியல் பொது கலந்தாய்வு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை முதல் 2 நாட்களுக்கு தொழிற் கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
பொறியியல் படிப்பில் சேரு வதற்கான பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. கலந்தாய்வு மூலம் இதுவரையில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. 42 ஆயிரத் துக்கும் மேற்பட்டவர்கள் கலந் தாய்வுக்கு வரவில்லை.
இந்த நிலையில், பொது கலந் தாய்வு இன்றுடன் (செவ்வாய்க் கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, தொழிற் கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் (புதன், வியாழன்) 2 நாட்கள் நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 6 ஆயிரம் இடங்களுக்கு 3,500 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி யாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.