

ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய், பல் மருத்துவ சிகிச்சைப்பிரிவு உள்ளிட்ட பல் வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. எந்த நேரத்திலும் இந்தக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து விழும் அபாயத்தில் உள்ளன.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை, கடந்த 175 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து செயல்படுகிறது. கருங் கற்களால் கட்டிய கட்டிடம் உறுதியாகவும், பாதுகாப்பாகவும், உள்ளது. இந்த கட்டிடத்தில்தான் கதிரியக்கம் உள்ளிட்ட பாதுகாப் பான சிகிச்சைப் பிரிவுகள் செயல் படுகின்றன.
ஆனால், மருத்துவக்கல்வி இயக்குநரகம் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு கட்டிய கட்டிடங்கள் சரியான தரம், பராமரிப்பு இல் லாமல் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு நிற்கின்றன. குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டிடப் பிரிவுக் கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளன. பல இடங்களில் கட்டிடங்களில் சிமென்ட் உதிர்ந்து விழுந்து கம்பி கள் வெளியே தெரிகின்றன.
செவிலியர் இல்லம் அருகே கலையரங்கம் எதிரே அமைந்துள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, பல் மருத்துவ சிகிச்சைப் பிரிவு கட்டிடங்களில் செடிகள் வளர்ந் துள்ளன. கான்கிரீட் தூண்கள்தான், கட்டிடத்திற்கு பலமே. ஆனால், இந்தக் கட்டிடத்தில் தூண்கள் பலமிழந்து மேலிருந்து கீழே வரை விரிசல் விட்டுள்ளன.
இதுபோல், பல கட்டிடங்களும் உறுதித்தன்மையை இழந்து நிற்கின்றன. குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுக்கும், புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கும் சேர்த்து தற்போதுள்ள கட்டிடங்களை இடித்து 7 அடுக்கு மாடியுடன் புதிய கட்டிடம் பிரம்மாண்டமாக கட்ட ரூ.90 கோடியில் திட்டம் அறிவிக் கப்பட்டது. அரசும் அதற்கான நிதி ஒப்புதலையும் அளித்தது.
ஆனால், இந்தத் திட்டம் கிணற் றில் போட்ட கல்லாக உள் ளதால் மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் பணியாற்றுகின்றனர்.
விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங் களைப் பராமரிப்பதற்கே மருத்துவ மனை நிர்வாகம் அதிகளவு நிதியை ஆண்டுதோறும் வீணாகச் செலவு செய்து வருகிறது. ஆனால், மருத்துவக்கல்வி இயக்குநரகம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டிடங்களைக் கண்டுகொள்ள வில்லை.
மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, சமீப காலத்தில் கட்டிய கட்டங்களை தவிர விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களை இடித்துப் புதிதாக கட்ட வேண்டும். அதற்காகத்தான் தற்போது ஜப்பான் நாட்டு நிறு வனம் உதவியுடன் புதிய கட்டி டம் கட்டப்படுகிறது. இந்தக் கட்டி டமும், ரூ.90 கோடியில் புதிய கட்டிடமும் கட்டினால் மருத் துவமனையில் ஓரளவு பழுதான கட்டிடங்களுக்குப் பதிலாக புதிய கட்டிடங்கள் அமையும் வாய்ப்பு ள்ளது, என்றார்.
‘டீன்’ வனிதாவிடம் கேட்டபோது, விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய் துள்ளோம். குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு, புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு இரண்டையும் சேர்த்துதான் ரூ.90 கோடிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்குத் திட்டம் தயார் செய்துள்ளோம். மருத்துவக்கல்வி இயக்குநரகம் ஒப்புதல் அளித்ததும், நிதி பெற்று கட்டுமானப்பணியை தொடங் குவோம், என்றார்.