

திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் மற்றும் நன்னிலம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரு சிறுமி, 3 சிறுவர்கள் அதிக தண்ணீர் வந்ததால் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்த குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வம். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களின் மகள் திவ்யா(11), மகன் ஸ்ரீராம்(6) ஆகிய இருவரும் நேற்று மதியம் குளிப்பதற்காக திருமலைராஜன் ஆற்றுக்குச் சென்றனர்.
ஆற்றில் நேற்று அதிகம் தண்ணீர் வந்ததை அறியாமல், ஆற்றில் இறங்கி குளித்த இருவரும் தண் ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். உடனே, அருகில் குளித்துக் கொண்டு இருந்தவர்கள் இரு வரையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர், அவர் கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து குட வாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
திருவாரூர் மாவட்டம் நன்னி லம் அடுத்த வாஞ்சியம் கிராமத் தைச் சேர்ந்தவர்கள் அண்ணா மலை, நடராஜன். அண்ணாமலை யின் மகன் விக்னேஷும்(9), நடராஜன் மகன் வெங்கடே ஷும்(12) காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நேற்று மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள புத்தாற் றில் குளிப்பதற்காகச் சென்றனர்.
வீடு திரும்பாததால் சந்தேகம்
ஆற்றுக்குச் சென்ற இருவரும் வெகு நேரமாகியும் வீடு திரும் பாததால் அவர்களைத் தேடி அண்ணாமலை புத்தாற்றுக்குச் சென்றார். அப்போது, ஆற்றில் அதிக தண்ணீர் வந்ததை அறி யாமல் குளித்தபோது நீரில் மூழ்கி இருவரும் இறந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் இருவரின் சடலங்களையும் மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.
இதுகுறித்து, நன்னிலம் போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.