நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40,000 கனஅடியாக அதிகரிப்பு: கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 37500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரு கரைகளைத் தொட்டபடி காவிரியில் பாய்ந்தோடுகிறது.
மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 37500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மதகுகள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இரு கரைகளைத் தொட்டபடி காவிரியில் பாய்ந்தோடுகிறது.
Updated on
1 min read

எஸ்.விஜயகுமார்

சேலம்

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் கனமழை பெய்துள்ளதை தொடர்ந்து மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 40,000 கனஅடி நீர் வரத்துள்ளது. 37,500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, மேட்டூர் அணை கடந்த 7-ம் தேதி முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, அணை யில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், 15 நாட்கள் வரை நீர் மட்டம் 120 அடிக்கு குறையாமல் இருந்தது.

இந்நிலையில், அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால், கடந்த 22-ம் தேதி அணை நீர்மட் டம் 119.94 அடியாக குறைந்தது. இதனால், டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 8,000 கனஅடி யாக குறைக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

மேட்டூரில் 89.20 மிமீ மழை

இதனிடையே, கடந்த இரு நாட் களாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. மேலும் மேட்டூர் அணை பகுதி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. மேட்டூரில் 89.20 மிமீ, மழை பதிவானது. கன மழை காரண மாக, காவிரியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் விநாடிக்கு 9,907 கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 15 ஆயிரம் கனஅடியாகவும், மாலை 40 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித் தது. இதையடுத்து, அணையில் இருந்து விநாடிக்கு 37,500 கனஅடி உபரிநீர் மதகு மற்றும் 16 கண் மதகுகள் வழியாக திறக் கப்பட்டுள்ளது.

கால்வாய் பாசனத்துக்காக விநாடிக்கு 600 கனஅடி திறக் கப்பட்ட நீர் 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.23 அடியாகவும், நீர் இருப்பு 93.83 டிஎம்சி-யாகவும் உள்ளது.

அமைச்சர் வேண்டுகோள்

தமிழக வருவாய்த்துறை அமைச் சர் ஆர்.பி.உதயகுமார் சென்னை யில் செய்தியாளர்களிடம் கூறும் போது, மேட்டூர் அணை முழு கொள் ளளவை அடைந்துள்ள நிலை யில், தற்போது நீர்வரத்து முழுமை யாக காவிரி ஆற்றில் திறக்கப் படும். எனவே, காவிரி கரையோரத் தில் வசிக்கும் மக்கள் பாதுகாப் பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட் டுள்ளனர் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in