Published : 25 Sep 2019 08:39 AM
Last Updated : 25 Sep 2019 08:39 AM

மக்களவைத் தேர்தல் செலவுகளுக்காக திமுகவிடம் நன்கொடை பெற்றதில் ஒளிவுமறைவு இல்லை: இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம்

சென்னை

மக்களவைத் தேர்தல் செலவு களுக்காக திமுகவிடம் இருந்து நன்கொடை பெற்றதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கம் அளித்துள்ளன.

மக்களவைத் தேர்தல் வரவு - செலவுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி திமுக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்த லில் திமுக மொத்தம் ரூ.79 கோடியே 26 லட்சத்து 10 ஆயிரத்து 482 செலவு செய்துள்ளதாகவும், அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.15 கோடி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ரூ.15 கோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ.10 கோடி என ரூ.40 கோடி நன்கொடையாக வழங்கப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை விவகாரம் தொடர் பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேர்தல் செலவு குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி கள் தவறானவை. மக்களவைத் தேர்தலின்போது தமிழகம் உட்பட நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்கொடைகள் பெற்றது. அந்தக் கணக்கு விவரங் கள் அனைத்தும் தேர்தல் ஆணை யத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடும்போது இதை சரிபார்த்துக் கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, ‘‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவைத் தேர்தல் செலவு களுக்காக மாநிலம் முழுவதும் நன் கொடை திரட்டியது. வரவு - செலவு கள் அனைத்தும் வங்கிகள் மூலமே வெளிப்படைத் தன்மையுடன் மேற் கொள்ளப்பட்டன. எனவே, இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. திமுக வெளிப்படைத் தன்மை யுடன் தனது செலவு கணக்கை காட்டியுள்ளது. இதில் எந்தத் தவறும் இல்லை. இது வழக்கமான நடைமுறைதான்’’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனிடம் கேட்டபோது, ‘‘எல்லா கட்சி களையும்போல இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியும் தேர்தல் நிதி பெற் றது. அதை முறையாக, வெளிப் படைத்தன்மையுடன் செலவு செய் தோம். அந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள் ளோம். கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள், சிறிய கட்சிகளுக்கு உதவி செய்வதும், கூட்டணிக் கட்சிகள் பரஸ்பரம் உதவி செய்வதும் வழக் கமானது. எங்களுக்கு கிடைத்த நன்கொடையை இந்திய கம்யூ னிஸ்ட் போட்டியிட்ட 2 தொகுதி களுக்கு மட்டும் செலவு செய்ய வில்லை. புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் எங்கள் கட்சியினர் தேர்தல் பணியாற்றினர்’’ என்றார்.

கூட்டணி கட்சிகளுக்கு நன் கொடை வழங்கியது குறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டபோது, "இது வழக்கமான ஒன்றுதான்" என்றார்.

தேர்தல் ஆணையத்தில் திமுக தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச் சாரத்துக்கு ரூ.58 லட்சத்து 93 ஆயி ரத்து 994 செலவிட்டுள்ளது. இதில் பெரும்தொகை அவரது விமானப் பயணத்துக்கு செலவானதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்ய ரூ.15 கோடியே 46 லட்சத்து 14 ஆயிரத்து 693 செலவிட்டுள்ளது. திமுக சார்பில் போட்டியிட்ட மக்களவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு தலா ரூ.50 லட்சம், சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களுக்கு தலா ரூ. 25 லட்சம் செலவிடப்பட்டதாக திமுக தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x