கடந்த 3 ஆண்டுகளில் தமிழக ரயில் நிலையங்களில் 7,512 குழந்தைகள் மீட்பு: ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சைல்டு லைன் அறக்கட்டளை சார்பில் ரயில்வே போலீஸாருக்கான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்திரகுமார், காவல்துறை தலைவர் வனிதா, சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், பி.எம்.நாயர் ஐ.பி.எஸ். சென்னை மண்டல முதுநிலை பாதுகாப்பு ஆணையர் சந்தோஷ் சந்திரன். படம்: பு.க.பிரவீன்

Updated on
1 min read

சென்னை

தமிழக ரயில் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளில் 7 ஆயிரத்து 512 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

குழந்தை மற்றும் மனித கடத்தல் தடுப்பு தொடர்பாக தமிழக ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம், சென்னை சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் தமிழக ரயில்வே போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு, ரயில்வே பாதுகாப்புப் படை ஐஜி பிரேந்தர் குமார் ஆகியோர் கலந்து கொண்ட னர். குழந்தைகள் மீட்புப் பணி யில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சைலேந்திரபாபு, “தமிழக ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரத்து 512 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோர், வீடுகளில் பெற்றோர் மற்றும் உறவினர் களிடம் கோபித்துக் கொண்டு வெளியேறுவோர் மற்றும் வேலைக்கு அழைத்து வரப்படு வோராகவே உள்ளனர்.

இவ்வாறு ரயில் நிலையங்களில் தவிக்கும் குழந்தைகளை கண்டு பிடிப்பது எப்படி, அவர்களிடம் பேசுவது, மீட்பது, பாதுகாப்பது குறித்து தமிழக ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட பலருக்கு பயிற்சி அளிக்கப்படு கிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in