சென்னை அரசு அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த ரூ.52 கோடி நிதி: மத்திய அரசிடம் அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

சென்னை அரசு அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த ரூ.52 கோடி நிதி: மத்திய அரசிடம் அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை

சென்னை அரசு அருங்காட்சிய கத்தை உலகத்தரத்துக்கு உயர்த்த ரூ.52 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரிடம் தமிழக அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் நடைபெற்று வரும் 3-வது பன்னாட்டு திருக்குறள் மாநாட்டை அமைச்சர் க.பாண்டிய ராஜன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் பிரஹலாத்சிங் படேலை சந்தித்து பேசினார். அப்போது, கீழடி அகழாய்வின் 4-வது கட்ட அறிக் கையை வழங்கி, அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசின் நிதியை கோரினார். மேலும், தாகூர் பண்பாட்டு வளாகம், அருங் காட்சியக மேம்பாட்டு நிதியில் இருந்து சென்னை அரசு அருங் காட்சியகத்தை உலகத்தரத்துக்கு கொண்டு செல்ல ரூ.52 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.

மதுரை திருமலை நாயக்கர் மஹால், தஞ்சை சர்ஜாமாடி அகழ் வைப்பகம், மராத்தா அரண்மனை அகழ்வைப்பகம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அகழ்வைப்பகம் ஆகியவற்றை வலுப்படுத்த ரூ.19 கோடியே 20 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், கீழடி, ஆதிச்ச நல்லூர், கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களில் அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதியளிக் கவும் கோரிக்கை விடுத்தார். வைகை நதிக்கரையில் ஆய்வு நடத்தியது போல், தாமிரபரணி நதிக்கரையிலும், கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் ஆய்வு நடத்தவும் மத்திய அரசிடம் அனுமதி கோரினார்.

இந்த சந்திப்பின் போது மத்திய கலாச்சாரத் துறை செயலர் அருண்கோயல், தமிழ்நாடு அரசின் முதன்மை உள்ளுறை ஆணையர் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in