

சங்கரன்கோவில்
மது போதையில் வாகனம் ஓட்டி போலீஸாரிடம் சிக்கிய 2 பேரை அதிமுக பிரமுகர்கள் திரண்டு, போலீஸாரைத் தாக்கி மீட்டுச் சென்றனர். இதில் 2 போலீஸார் காயம் அடைந்தனர். இது தொடர்பாக அதிமுக பிரமுகர்கள் 5 பேர் உட்பட மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் டவுன் காவல் உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மற்றும் காவலர்கள் மகேஷ், டேவிட், செந்தில் ஆகி யோர் நேற்று முன்தினம் சங்கரன் கோவில்- புளியங்குடி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த சங்கர், தங்கதுரை ஆகி யோரை வழிமறித்து விசாரணை நடத்தியபோது, இருவரும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.
இருவரையும் மருத்துவ பரி சோதனைக்கு உட்படுத்த சங்கரன் கோவில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீஸாரிடம் வாக்கு வாதத்தில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும் தங்களை பிடித்து வைத் துள்ளது குறித்து அப்பகுதியை சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் களுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸாருடன் வாக்குவாதம்
இதையடுத்து, அதிமுக பிர முகர்கள் ஏராளமானோர் மருத் துவமனைக்கு திரண்டு வந்து, போலீஸ் பிடியில் இருந்த சங்கர், தங்கதுரை ஆகியோரை அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவர்களை போலீ ஸார் தடுத்ததால் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட் டுள்ளது. பின்னர், போலீஸ் பிடி யில் இருந்த இருவரையும் விடு வித்து அவர்கள் அழைத்துச் சென் றுள்ளனர். மோதலில் காவலர்கள் செந்தில், மகேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள், சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முருகன், முத்துசலா, செல்ல துரை மற்றும் போலீஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்ற சங்கர், தங்க துரை உள்ளிட்ட சிலர் மீது போலீ ஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக முக்கிய பிரமுகர் ஒருவரின் கணவர் தலைமையிலான கும்பல் 2 பேரையும் மீட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. போதிய ஆதாரம் கிடைத்தால் அந்த முக்கியப் பிரமுகர் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.