

சென்னை
வெங்காயம் விலை அதிகரித்து பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட் டால், அரசே கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்யும் என்று அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கனமழை, வரத்து குறைவு இவற்றின் காரணமாக தமிழகத் தில் கடந்த சில தினங்களாக மக்கள் அதிக அளவில் பயன்படுத் தும் பெரிய வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகி றது. மொத்த சந்தையில் விற்கப் படும் விலைக்கும் சில்லறை விலைக்கும் இடையே ரூ.20-க்கும் மேல் வித்தியாசம் காணப்படுகிறது.
இந்நிலையில், வெங்காய விலை உயர்வு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ மற்றும் ஆர்.காமராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், செயலர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி கள், பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45 முதல் 46 வரையும் தனியார் கடைகளில் ரூ.55 முதல் 60 வரையும் விற்கப்படுவதாகவும் அதிகவிலைக்கு விற்கப்பட வில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், சமீபகாலமாக மகாராஷ் டிரா, கர்நாடகாவில் கனமழை பெய்ததால் வெங்காயத்தின் வரத்து குறைந்ததாகவும் இத னால் விலை உயர்ந்துள்ள தாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே, நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிகளவில் வெங்காய லாரிகள் கோயம்பேடு வந்துகொண்டிருப்பதால், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூட் டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்போது அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.காமராஜ் ஆகியோர் பேசும்போது,‘‘ வெங் காய விலை தொடர்பான நிகழ்வு களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். எங்கும் பதுக்கல் இல்லாமல், பொதுமக்களுக்கு சிரமமும் இல்லாமல் வெங்காயம் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. கடந்த ஆண்டுகளைப் போல் தேவைப்படும்போது, விலை கட்டுப்பாட்டு நிதியம் மூலம், அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்க முதல்வரிடம் உத்தரவு பெற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்.