காட்பாடி யார்டில் பராமரிப்பு பணியால் 5 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்

காட்பாடி யார்டில் பராமரிப்பு பணியால் 5 நாட்கள் ரயில் சேவையில் மாற்றம்
Updated on
1 min read

சென்னை

வேலூர் காட்பாடி யார்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வரும் 28-ம் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அரக்கோணம் - ஜோலார்பேட்டை தடத்தில் காட்பாடி யார்டில் இன்று முதல் 28-ம் தேதி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், மேற்கண்ட நாட்களில் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் கன்டோன்மென்ட் - அரக்கோணம் பயணிகள் ரயிலின் (56010) மாலை 5.10 மணி சேவை 25, 26, 28-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில் (56122) வரும் 25, 26-ம் தேதிகளில் மதியம் 1.30 மணி சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு ஜோலார் பேட்டையில் இருந்து லத்தேரிக்கு இயக்கப்படும். அரக்கோணம் - வேலூர் கன்டோன்மென்ட் பயணிகள் ரயில் (56013) 28-ம் தேதி மதியம் 1.05 மணி சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு அரக்கோணத்தில் இருந்து சேவூருக்கு இயக்கப்படும்.

பெங்களூர் கன்டோன்மென்ட் - அகர் தலா ஹமர்சபர் விரைவு ரயில் லத்தேரி யில் இன்று 140 நிமிடங்களும், யஸ்வந்த் பூர் - ஹவுரா துரந்தோ விரைவு ரயில் (12246) காவனூரில் 60 நிமிடங்களும், திருப்பதி - மன்னார்குடி ரயில் (17407) மற்றும் திருப்பதி - ராமேசுவரம் ரயில் (16779) காட்பாடியில் 30 நிமிடங்கள் உட்பட 8 விரைவு ரயில்கள் தாமதமாக இயக்கப்படும்.

சிறப்பு ரயில்கள்

வேலூர் கன்டோன்மென்ட் - அரக் கோணத்துக்கு 25, 26, 28-ம் தேதிகளில் மாலை 5.40 மணிக்கும், லத்தேரி - அரக் கோணத்துக்கு 25, 26-ம் தேதிகளிலும், சேவூர் - வேலூர் கன்டோன்மென்ட்க்கு 28-ம் தேதி மாலை 3.50 மணிக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in