

சென்னை
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் அதிகாரிகளின் உதவி இல்லாமல் தேனி கல்லூரியில் சேர்ந்திருக்க முடியாது என்று மாணவர்களின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பி பிஎஸ் படிப்பில் சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாண வர் படித்து வந்தார். இந்த மாண வர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவர் உதித் சூர்யாவும், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த மாண வரின் தந்தை வெங்கடேசனும் தலைமறைவாகினர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தமிழகம் முழு வதும் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ கம் முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியரின் சான்றிதழ்கள் உள் ளிட்ட அனைத்து ஆவணங்களை யும் சரிபார்க்கும்படி தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தவிட்டுள்ளன.
அதன்படி, அனைத்து மருத் துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. பெரும் பாலான அரசு கல்லூரிகள் சான் றிதழ்கள் சரிபார்க்கும் பணியை நிறைவு செய்து அறிக்கைகளை மருத்துவக் கல்வி இயக்குநர கத்துக்கு அனுப்பியுள்ளன. மீத முள்ள கல்லூரிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன.
இதற்கிடையே சில கல்லூரி களில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு என்ற பெயரில் மாணவ, மாணவி யரை குற்றவாளிகளைப் போல் விசாரணை நடத்துவதாக பெற் றோர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது, “நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் நேரடியாக கல்லூரியில் சேர்ந்துவிடவில்லை. மருத்துவக் கல்வி இயக்குநரகம் நடத்திய கலந்தாய்வில் பங்கேற்ற பின்னர் தான் கல்லூரியில் சேர்ந்துள்ளார். அப்படி இருக்கும்போது அதிகாரி கள் உதவி இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. அந்த மாணவரைக் கண்டுபிடித்து நட வடிக்கை எடுக்காமல், எங்கள் பிள்ளைகளை குற்றவாளிகளைப் போல் நடத்துவது நியாயம் இல்லை” என்றனர்.