

சென்னை
சென்னையில் தொடர் கொள்ளை யில் ஈடுபட்ட பின்னர் ராஜஸ் தானுக்கு ரயிலில் தப்பிய கொள் ளையர்களை கைது செய்தது குறித்து கூடுதல் காவல் ஆணையர் விளக்கம் அளித்தார்.
சென்னை நங்கநல்லூரில் தொழிலதிபர் ரமேஷ் (வயது 52) வீட்டில் கடந்த 20-ம் தேதி 120 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ராம்நிவாஸ் (30), ராம்டிமியா (20), கைலாஸ் (18), காலுராம் (23), கரோவ் (19), கடு (18), சம்பவ்ரியா (20) ஆகிய 7 பேர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நக்டா ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானுக்கு ரயிலில் தப்பியபோது சென்னை போலீஸார் அளித்த தகவலின் பேரில் அங்குள்ள போலீஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 120 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. கைது செய்யப்பட்ட அனை வரையும் போலீஸார் அங்கிருந்து தனி வாகனம் மூலம் சென்னை அழைத்து வருகின்றனர். தலை மறைவாக உள்ள மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டது குறித்து தென் சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
நங்கநல்லூரில் கொள்ளை நடந்த உடன் இணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 10 தனிப் படையினர் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் அன்றைய தினமே நங்கநல்லூரை தொடர்ந்து தாம்பரம் சிடிஓ காலனியில் நட ராஜன் என்பவர் வீட்டிலும், ஆதம் பாக்கத்தில் ஏழுமலை என்பவர் வீட்டிலும், 2017-ம் ஆண்டில் அதே தாம்பரம் சிடிஓ காலனியில் ராமன் என்பவர் வீட்டிலும் அடுத்தடுத்து கைவரிசை காட்டியிருந்தது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள கேமரா மூலம் அனைவரும் ராஜஸ்தான் செல்ல உள்ளதை அறிந்து ரயில்வே போலீஸார் உட்பட அனைத்து வகை போலீஸாருக்கும் தகவல் தெரிவித்து 24 மணி நேரத்தில் கைது செய்துள்ளோம். பிடிபட்ட அனைவரும் ரயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் பயணித்து சென்னை வந்து அதேபோல் திரும்பி செல்வார்கள். பவாரியா கொள்ளையர்கள் போன்று இல்லா மல் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டுவர். கொள்ளையடித்த இரண்டரை மணி நேரத்துக்குள் ராஜஸ்தான் புறப்படும் வகையில் செயல்படுவர். ராஜஸ்தானில் இருந்து சென்னை வந்து பிளாட்பாரம், பொது இடங் களில் தங்குவது வழக்கம்.
அவர்கள் செல்போன்களை பயன்படுத்துவதில்லை. கைவரிசை காட்டிவிட்டு குறிப்பிட்ட இடத்துக்கு, குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று ரயிலில் ஏறிவிடுவர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வந்து சென்ற பிறகு மீண்டும் அதே செப்டம்பரில் வந்துள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் தெரிய வரும். சிசிடிவி கேமரா பதிவுதான் கொள்ளையர்களை கைது செய்ய பேருதவியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது துணை ஆணையர் பிரபாகர் உடனிருந்தார்.