மலேசியா சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து பரிசீலனை: தூதரக அதிகாரி சரவணன் தகவல்

மலேசியா சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து பரிசீலனை: தூதரக அதிகாரி சரவணன் தகவல்
Updated on
1 min read

சென்னை

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல இலவச விசா வழங்குவது குறித்து அந்நாட்டு அரசு பரி சீலனை செய்து வருவதாக மலேசிய தூதரக அதிகாரி கே.சரவணன் தெரி வித்துள்ளார்.

மலேசியா நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘மலேசியா 2020’ என்ற திட்டத்தை தென் இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் நேற்று கண்காட்சி தொடங்கியது. இதில், மலேசியாவில் இருந்து வந்து பங்கேற்ற 27 பேர் அங்குள்ள சுற்றுலா திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதேபோல், மதுரை, கோயம் புத்தூர் மற்றும் கொச்சியிலும் கண்காட்சி நடக்கவுள்ளது. மலே சியா 2020 சுற்றுலாவுக்கான பிரத் யேக ‘லோகோ’ வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக மலேசிய தூதரக அதிகாரி கே.சரவணன் பேசும்போது, ‘‘அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ‘மலேசியா 2020’ என்ற திட்டத்தை ஊக்கப்படுத்தம் வகையில் நேற்று முதல் 26-ம் தேதி வரையில் தென்இந்தியாவில் 4 நகரங்களில் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்தியாவில் இருந்து மலேசி யாவுக்கு சுற்றுலா செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் இந்தியாவில் இருந்து மொத்தம் 6 லட்சத்து 311 பேர் மலேசியாவுக்கு வந்து சென்றுள்ள னர். கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டுமே 3 லட்சத்து 54 ஆயிரம் பேர் வருகை புரிந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 7 லட்சத்து 28 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலேசியாவுக்கு சுற்றுலா செல்ல ‘இலவச விசா’ வழங்குவது குறித்து மலேசியா அரசு ஆலோசித்து வருகிறது’’ என்றார்.

மலேசியா சுற்றுலா வாரியத் தின் மூத்த இயக்குநர் முகமது தையிப் இப்ராஹிம் பேசும்போது, ‘‘சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளைக் கவர்வதில் மலேசியா முக்கிய பங்கு வகிக் கிறது. தற்போது, புதிய, புதிய சுற்றுலாத் தலங்கள், இயற்கை எழிலுடன் கூடிய இடங்களும் மேம் படுத்தப்பட்டு சுற்றுலா இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டில் முதல் காலாண் டில் மலேசியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 33 லட்சத்து 54 ஆயிரத்து 575 ஆகும். சிங்கப்பூர், இந்தோனேஷியா, சீனா, தாய்லாந்து, இந்தியா, வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அடுத்த ஆண்டில் மலேசியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 3 கோடி யாக உயரும் என எதிர்பார்க் கிறோம்’’ என்றார்.

நிகழ்ச்சியில் மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (மாட்டா) டத்தோ டான் கோக் லியாங், மலேசியா சுற்றுலாத் துறையின் துணை இயக்குநர் லோகி தாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in