

சென்னை
அதானி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து டான்ஜெட்கோ நாளை மறுதினம் பதிலளிக்க உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ள னர்.
ஒரு மெகா வாட்டுக்கு குறை வாக மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மின்சாரத்தை நேரடி யாக பயன்படுத்த அல்லது விநி யோகம் செய்ய தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது.
இந்த அரசாணை சட்டவிரோ தமானது எனக் கூறி திண்டுக் கல்லைச் சேர்ந்த தமிழ்நாடு நூற்பு ஆலைகள் சங்கம் மற்றும் கோவை யில் உள்ள தமிழ்நாடு மின் நுகர்வோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இது அரசின் கொள்கை முடிவு எனக் கூறி அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்த ரவை எதிர்த்து அந்த சங்கங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதி பதிகள் என்.கிருபாகரன், பி.வேல் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. அப் போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோ ரும், அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர் கள் தரப்பில், அதானி நிறுவனத் திடம் இருந்து ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரத்தை ரூ.7-க்கு வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) 21 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய் துள்ளதாகவும், ஆனால் தாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு தமிழக அரசு ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மட்டுமே வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டான்ஜெட்கோ ஒரு யூனிட் டுக்கு ரூ.5-ஐ கூடுதலாக அதானி நிறுவனத்துக்கு கொடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதை ஏற்க முடியாது. அது தவிர்க்கப்பட வேண்டும். இந்த தொகை ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும். எனவே கடந்த 10 ஆண்டுகளி்ல் டான்ஜெட்கோ, தனியார் மின் உற்பத்தியாளர்களி டம் இருந்து எவ்வளவு மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது?. அவர் களிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு விலை கொடுத்து மின் சாரம் வாங்கப்பட்டுள்ளது?. மின் கொள்முதல் தொடர்பாக தமிழகத் தில் என்னென்ன ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன? அதானி நிறுவ னத்துடன் 21 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.7-க்கு கொள்முதல் செய்ய டான்ஜெட்கோ ஒப்பந்தம் போட்டுள்ளதா?
செப்.26-க்கு தள்ளிவைப்பு
அதேபோல, மனுதாரர்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2-க்கு வாங்கப்படுகிறதா? அதானி குழுமத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி தமிழக அரசுக்கு ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.5 இழப்பு ஏற்படுகிறதா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நீதிபதிகள், இது தொடர்பாக டான்ஜெட்கோ நாளை மறுதினம் (செப்.26) விரிவாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.