

புதுச்சேரி
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரில் முக்கிய நபர், வெடிகுண்டு வீசியும் அதைத்தொடர்ந்து வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜோசப் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டோரில் முக்கிய நபர் சந்திரசேகர், வயது 54. கொலை வழக்கில் கைதாகியிருந்த சந்திரசேகர், தற்போது ஜாமீனில் வெளியில் இருந்தார். இச்சூழலில் இன்று (செப்.23) காலாப்பட்டு-மாத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்த சந்திரசேகர் மீது மர்ம நபர்கள், வெடிகுண்டு வீசியும் அதைத் தொடர்ந்து வெட்டியும் படுகொலை செய்தனர்.
கொலை செய்யப்பட்ட சந்திரசேகர்
சந்திரசேகர் உடலை காலாப்பட்டு போலீஸார் கைப்பற்றியுள்ளனர். பழிக்குப் பழியாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இச்சம்பவத்தால், காலாப்பட்டு பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
செ.ஞானபிரகாஷ்