

என்.மகேஷ்குமார்
திருப்பதி
திருப்பதி ஏழுமலையான் கோயி லில் பிரம்மோற்சவ விழா வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதில் முதல் நாள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, அரசு சார்பில் முதன் முறையாக பட்டு வஸ்திரம் காணிக்கையாக வழங்க உள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 30-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் கோலாகல மாக துவங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திரு மலையில் மராமத்து பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
குடிநீர் வசதிகள் செய்யப் பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து, பாதுகாப்பு பணி களும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் திருப்பதியில் உள்ள பத்மாவதி தாயார் விடுதியில் பிரம்மோற்சவத்திற்கான தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் பிரம் மோற்சவ சுவரொட்டிகளை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில்குமார் சிங்கால், அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாராவ், திருப்பதி இணை அதிகாரி பசந்த் குமார், தலைமை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் ஆகியோர் வெளியிட்டனர்.