Published : 23 Sep 2019 08:28 AM
Last Updated : 23 Sep 2019 08:28 AM

மழையும், அணை இருப்பும் விதைத்த நம்பிக்கை; டெல்டாவில் 4.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடிக்கு வாய்ப்பு

எஸ். கல்யாணசுந்தரம்

திருச்சி

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை மற்றும் மேட்டூர் அணை நீர் இருப்பு ஆகியவை அளித்த நம்பிக்கை யால் நிகழாண்டில் 4.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிக்கு வாய்ப்பு இருப்ப தாக விவசாயிகள் தெரிவிக்கின் றனர்.

டெல்டா பாசன சாகுபடிக்காக ஆக.13-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருந்ததால், அணையில் இருந்து நீரும் அதிக அளவில் திறக்கப்பட்டது. மேலும், டெல்டா மாவட்டங்களில் மழையும் பெய்து வருகிறது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது.

மழையால் நடவு தாமதம்

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மற்றும் திருச்சி மாவட்டத்தில் ஒரு பகுதி என காவிரி ஆற்றுப் பாசனத்தை நம்பி வழக்கமாக 4.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி நடைபெறும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக் கமான சாகுபடி பரப்பு 1.30 லட்சம் ஹெக்டேர். இதில் இதுவரை 12 ஆயிரம் ஹெக்டேரில் நடவும், 6,016 ஹெக்டேரில் நேரடி விதைப்பும் செய்யப்பட்டுள்ளது. 60 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்வதற்கு தேவையான நாற்றங்கால் தயாரிக் கப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு 130 முதல் 135 நாட்கள் வயதுடைய மத்திய கால நெல் ரகங்களான பிபிடி 5204, கோ.ஆர்- 50, சொர்ணா சப் ஆகிய ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

டெல்டா மாவட்டங்களில் பெய் யும் மழையால் நடவுப் பணிகளில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், நடவுப் பணிகள் அனைத்தும் அக்.31-ம் தேதிக்குள் முடிக்கப்படும் எனவும், விவசாயிகளுக்கு தேவை யான விதைகள் 1,110 டன் விநி யோகம் செய்யப்பட்டுள்ளது என வும் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அ.ஜஸ்டின் கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, வழக்கமாக 1.49 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு இதுவரை 72,600 ஹெக்டேரில் நேரடி விதைப்பு நடைபெற்றுள்ளது. 30 ஆயிரம் ஹெக்டேரில் நடவு செய்ய நாற்றங்கால் அமைக்கப் பட்டுள்ளது. விவசாயிகளுக்கு 1,540 டன் விதை நெல் விநியோகிக் கப்பட்டுள்ளது. இன்னும் 250 டன் விதை நெல் இருப்பு உள்ளது என மாவட்ட வேளாண் இணை இயக்கு நர் சிவக்குமார் தெரிவித்தார்.

நாகை மாவட்டத்தைப் பொறுத்த வரை, வழக்கமாக 1,26,800 ஹெக் டேரில் சம்பா, தாளடி பருவத்தில் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு இதுவரையில் 26 ஆயிரம் ஹெக்டேரில் நடவும், 56 ஆயிரம் ஹெக்டேரில் நேரடி விதைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 360 ஹெக்டேரில் நாற்றங்கால் அமைக் கப்பட்டுள்ளது.

சம்பா பருவ நடவுப் பணிகள் அக்.15-ம் தேதிக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் எஸ். பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நம்பிக்கை தந்த நீர் இருப்பு

திருச்சி மாவட்டத்தில் வழக்க மான சாகுபடி பரப்பு 45 ஆயிரம் ஹெக்டேர். இதில் இதுவரை 100 ஹெக்டேரில் நடவு மேற் கொள்ளப்பட்டுள்ளது. 1,000 ஹெக் டேரில் நாற்றுகள் விடப்பட்டுள்ளன என வேளாண் துறை வட்டாரங் கள் தெரிவித்தன. நிகழாண்டில் டெல்டா பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் திறப்பு ஆகியவை அளித்த நம்பிக் கையால் இந்த ஆண்டு முழு அளவுக்கு சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ள தாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x