Published : 23 Sep 2019 08:24 AM
Last Updated : 23 Sep 2019 08:24 AM

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் புகார்; தேனியில் 3 மருத்துவர்களிடம் விசாரணை: முக்கிய பேராசிரியர்களிடம் தனித்தனியே விசாரிக்க போலீஸ் திட்டம்

ஆண்டிபட்டி

நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த உதித்சூர்யாவின் சான்றிதழ் களை சரிபார்த்த கல்லூரி துணை முதல்வர் மற்றும் 3 பெண் மருத்து வர்களிடம் தனிப்படை போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். அடுத்த கட்டமாக முக்கியப் பேராசிரியர்களிடம் தனித்தனியே விசாரணை செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

நீட் தேர்வில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் உதித்சூர்யா ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டது குறித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடைபெற்று வருகிறது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ராஜேந்திரனிடம் நேற்று முன் தினம் தனிப்படை ஆய்வாளர் உஷா ராணி, எஸ்.ஐ. அசோக் ஆகியோர் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரித்தனர்.

தனிப்படை விசாரணை

இதில் மாணவர் சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு, சம்பந்தப் பட்ட மாணவரை உறுதிப்படுத்து வதில் ஏற்பட்ட குளறுபடி, அதற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. உதித் சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனிடம் ஆள் மாறாட்டப் புகார் தொடர்பாக கல் லூரி நிர்வாகம் நடத்திய விசாரணை உள்ளிட்ட விவரங்களையும் தனிப் படை பதிவு செய்தது.

இந்நிலையில் மாணவர் சேர்க் கையின்போது சான்றிதழ்களை சரி பார்க்க துணை முதல்வர் எழிலர சன் தலைமையில் 3 பெண் மருத்து வர்கள் உட்பட 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருந்தது. இவர் களில் துணை முதல்வர் எழிலரசன் மற்றும் 3 பெண் மருத்துவர்களிடம் தனிப்படை போலீஸார் 2-வது நாளாக நேற்று விசாரணை செய்தனர். டீன் ராஜேந்திரனிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

உதித் சூர்யா கல்லூரியில் சேர வந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், சான்றிதழ் சரிபார்ப் பின்போது மற்றவர்களின் தலையீடு இருந்ததா? உதித் சூர்யா கல்லூரி சேர்க்கையின்போது நெருக்கடி எதுவும் தரப்பட்டதா என்பன உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிசிடிவி பதிவுகள்

இதையடுத்து கண்காணிப்புக் கேமரா பதிவுகள் போலீஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. எந் தெந்த இடத்தில் எத்தனை கேமரா உள்ளது, உதித் சூர்யா கல்லூரியில் சேர வந்தபோது உள்ள பதிவுகள், புகார் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்திய நாட்களில் உள்ள பதிவுகள் உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனிப் படையினர் கூறும்போது, விசாரணை நடை பெறுவதால் அது குறித்த தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. கண்காணிப்புக் கேமரா பதிவுகள் கேட்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள காட்சிகள் விசாரணைக்கு உறுதுணையாக இருக்கும். கல்லூரியில் உள்ள முக்கியப் பேராசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்து அதற்கேற்ப அடுத்த கட்ட நட வடிக்கை இருக்கும் என்றனர்.

வட மாநில அதிகாரிகள் உடந்தை?

நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் வடமாநில உயர் அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் குற்றம் சாட்டினார்.

தென் மண்டல மருத்துவக் கல் லூரி மாணவர்கள் சார்பில் சிவங்கை யில் நேற்று நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற அவர் கூறியதாவது: வட மாநிலங்களில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேருகின்றனர். ஆனால் தமிழகத்தில் ஆதார், ஹால் டிக்கெட் போன்றவை இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கின் றனர். இதனால் இங்கு சாதார ணமாக ஆள்மாறாட்டம் செய்ய முடியாது.

இந்த மோசடியில் நாடு முழுவ தும் பலர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள் ளது. வட மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகள் பலர் இதற்கு உடந்தை யாக இருக்கின்றனர். இதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இதேபோல் பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்விலும் ஆள்மாறாட்ட மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி 2017-ல் இருந்தே நடக்கிறது. இதற் காகதான் தமிழக கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி வருகிறோம்.

தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தை நீக்க வேண்டும், நெக்ஸ்ட் தேர்வு நடத்தக் கூடாது, மருத்துவக் கல்வியை கார்ப்பரேட் மயமாக்கக் கூடாது, நவீன அறிவியல் மருத்து வத்தை வளர்க்க வேண்டும் என் பதை வலியுறுத்திதான் இம் மாநாடு நடைபெற்றது.

மருத்துவர்களின் வேலைப்பளு வைக் குறைக்க மருத்துவக் கல்லூரி களில் தீர்ப்பாயம் அமைக்க வேண் டும். மாநில அளவிலும் தீர்ப்பாயம் ஏற்படுத்த வேண்டும். இக்கோரிக் கைகளை வலியுறுத்தி சென்னை யில் நவ.10-ல் மாநில மாநாடு நடத் தப்படும். இதில் பல்வேறு கட்சிக ளின் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற் பர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x