Published : 23 Sep 2019 07:58 AM
Last Updated : 23 Sep 2019 07:58 AM

தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன்: ‘முத்து விழாவில்’ பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து

சென்னை

தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கம் சார்பில் பாமக நிறுவனர் ராம தாஸின் முத்து விழா நேற்று நடந் தது. இதில் வாழ்த்துப் பாடல்கள், நடன நிகழ்ச்சிகள், கவியரங்கம், விவாத நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:

படைப்பாளிகள்தான் உலகை வென்றிருக்கிறார்கள். அவர்கள் தான் இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்ட வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தின் கனவும், நமது கனவும் ஒன்றுதான். அந்த கனவு நனவாக வேண்டும் என்றுதான் நாம் எல்லோரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த கனவு என்ன என்று உங்களுக்குத் தெரி யும். 8 கோடி மக்களைக் கொண்ட தமிழ்ச் சமுதாயம் இன்னும் என் பின்னால் வர மறுக்கிறது. என்னி டம் என்ன குறை இருக்கிறது, என் கொள்கைகளில் என்ன குறை இருக்கிறது, நான் நடந்து வந்த பாதையில் என்ன தெளிவு இல்லா மல் இருக்கிறது என்பதை மேடை போட்டுச் சொல்லுங்கள். அதற்கு பதில் சொல்கிறேன். குறை இருந் தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன், திருத்திக் கொள்கிறேன் என்று சொன்னாலும்கூட யாரும் குறை சொல்ல முன்வரவில்லை.

இந்த எளியவனைப் பாராட்ட ஊடகத்தினரும் மற்றவர்களும் தயாராக இல்லை. இதுவே வேறு ஒருவராக இருந்திருந்தால் அவரை வாழும் மகாத்மா என்று சொல்லி இருப்பார்கள். ஒரு காலம் வரும். நிச்சயம் என்னை பாராட்டுவார்கள். தமிழ் மக்களுக்காக, தமிழ் சமு தாயத்துக்காக போராடுகின்றவன் நான். என் மொழிக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். தமிழ் மக்களுக்கு தொடர்ந்து போராடுவேன். எனது முதுமை காலத்திலும்கூட கோல் ஊன்றி நடந்தாவது போராடுவேன். தமிழ்ச் சமுதாயத்துக்கு தொடர்ந்து என்னை அர்ப்பணித்துக் கொள் வேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x