Published : 23 Sep 2019 07:52 AM
Last Updated : 23 Sep 2019 07:52 AM

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்; அதிமுகவினர் 27 பேர் விருப்ப மனு: வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு

சென்னை 

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முதல் நாளில் 27 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இத்தொகுதி களில் அதிமுக சார்பில் போட்டி யிட விரும்புவோர் 22, 23 ஆகிய தேதிகளில் விருப்ப மனு அளிக்க லாம். 23-ம் தேதி பிற்பகல் 3.30 மணி அளவில் விருப்ப மனு அளித்த வர்களிடம் நேர்காணல் நடத்தப் படும் என்று கட்சியின் ஒருங்கி ணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் அறிவித் தனர்.

அதன்படி, சென்னை ராயப் பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. இரு தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து அதிமுகவினர் பலர் மனு அளித்தனர். விரும்ப மனு கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்தினர்.

நாங்குநேரி தொகுதியில் போட்டி யிட விருப்பம் தெரிவித்து அதிமுக நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் மனு அளித்தார். அப்போது, கவிஞர் முத்துலிங்கம், நடிகர் அனுமோகன், திரைப்பட இயக்குநர் ரவிமரியா ஆகியோர் உடனிருந்தனர்.

“இடைத்தேர்தலில் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் சார்பில் ஒருவர் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் ஒற்றுமை யாக வந்து விருப்ப மனு அளித் துள்ளோம். எனவே, கட்சித் தலைமை இதற்கு அனுமதிக்க வேண்டும்" என்று அவர்கள் வேண்டு கோள் விடுத்தனர். அதேபோல அதிமுக அமைப்புச் செயலாளர் மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்பி கே.ஆர்.பிரபாகரன் உட்பட 18 பேர் நாங்குநேரி தொகுதிக்கு மனு அளித்தனர். விக்கிரவாண்டி தொகுதிக்கு முன்னாள் எம்.பி. லட்சுமணன் உள்ளிட்ட 9 பேர் மனு அளித்தனர்.

இன்று பிற்பகல் 3 மணி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். அதன்பிறகு 3.30 மணி அளவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் கட்சித் தலைமை நேர்காணல் நடத் தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முடிந்ததும் 2 தொகுதி களின் வேட்பாளர்களும் இன்றே அறிவிக்கப்படுவர் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

எம்எல்ஏக்கள் கூட்டம்

இதனிடையே அதிமுக எம்எல் ஏக்களின் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி யின் தலைமை அலுவலகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறவுள் ளது. அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனி சாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் உட்பட 122 எம்எல் ஏக்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

தமாகா ஆதரவு

தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

ஒட்டுமொத்த தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கின்ற அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. இதுவே நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு அடித் தளம். எனவே, விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தமாகா உறுதுணையாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x