Published : 23 Sep 2019 07:46 AM
Last Updated : 23 Sep 2019 07:46 AM

370-வது சட்டப்பிரிவை நீக்கியதால் இந்தியாவின் ஒற்றுமை வலுவடைந்துள்ளது: பாஜக பொதுச் செயலாளர் கருத்து

சென்னை

காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதால் இந்தியாவின் ஒற்றுமை மேலும் வலுவடைந்துள்ளது என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ் தெரிவித்தார்.

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அதனால் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மக்கள் சந்திப்பு கூட்டம், தமிழக பாஜக சார்பில் சென்னை திருவான்மியூரில் நேற்று நடந்தது. மாநில செயலாளர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், முன்னாள் மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாய கம், சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் வி.செல்வராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் ராம் மாதவ் பேசியதாவது:

தமிழ், தெலுங்கு போன்று இந்தியும் நமது தேசிய மொழி. அனைத்து தேசிய மொழிகளுக்கும் மரியாதை கொடுத்து கவுரப் படுத்த வேண்டியது நமது கடமை.

காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவை நீக்கியதன் மூலம் இந்தியா வின் ஒற்றுமை மேலும் வலுவடைந் துள்ளது. சாதி, மொழி, மதம், மாநிலங்களைக் கடந்து அனை வரும் இதை வரவேற்கின்றனர். ஆனால், சிலர் இதுபற்றி புகார் தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அரசை குற்றம்சாட்டி நீண்ட அறிக்கை வெளியிட்டார். 370 சட்டப்பிரிவு பற்றி அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் அரசியல் உரிமைகளை, இட ஒதுக்கீடுகளை பெற்று வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் அவர்களுக்கு இதுவரை இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு உரிமைகள் கிடைப்பதை திமுக எதிர்க்கிறதா?

370 சட்டப்பிரிவால் குறிப்பிட்ட 100 தலைவர்களைத் தவிர இந்துக் கள், முஸ்லிம்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருந் தனர். தற்போது அவர்கள், புதி தாக கிடைத்த சுதந்திரத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடு கின்றனர்.

அரசியல் ஆதாயத்துக்காக 370 சட்டப்பிரிவு விவகாரத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர். இது பிரதமர் எடுத்த வர லாற்று முடிவு. காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கு உதவுவதற்கு அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள் ளது நம்முடைய காஷ்மீர்தான். ஒட்டுமொத்த தேசமே காஷ்மீர் மாநில மக்களோடு ஒரு குடும்ப மாக நிற்பார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும் இன்னும் மீட்க வேண்டியிருக்கிறது இதுவும் விரைவில் மீட்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x