Published : 23 Sep 2019 07:24 AM
Last Updated : 23 Sep 2019 07:24 AM

இந்திய ராணுவத்துக்கு மார்த்தாண்டம் தேன்- பிரதமரிடம் மத்திய தேனீ பாதுகாப்பு முன்னேற்றக் குழு உறுப்பினர் பரிந்துரை

மார்த்தாண்டத்தில் தேன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி.

எல்.மோகன்

நாகர்கோவில்

ஏழை தேன் உற்பத்தியாளர்கள் பயன்பெறும் வகையில் இந்திய ராணுவத்துக்கு குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தேனை விநியோகம் செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் மத்திய தேனீ பாதுகாப்பு முன்னேற்றக் குழு உறுப்பினர் பரிந்துரை செய்துள்ளார்.

தமிழகத்தின் தேன் கிண்ணமாக திகழும் மார்த்தாண்டம் மற்றும் சுற்றுப்புற மலை கிராமங்களில் ஆண்டுக்கு சுமார் 70 ஆயிரம் டன் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தேனீ வளர்ப்பு மற்றும் தேன் உற்பத்தி மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் தேன் அறுவடை நன்றாக இருக்கும். கேரளா, கர் நாடகா, கோவாவில் உற்பத்தியாகும் தேனை விட மார்த்தாண்டம் தேன் அதிக ஊட்டச்சத்து களும், மாறாத இயற்கை சுவையும் உடையது.

குறைந்த அளவு விற்பனை

இங்கு 1992-ம் ஆண்டுவரை தேன் உற்பத்தியில் விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டி வந்தனர். அதன் பிறகு உற்பத்தியாகும் தேனில் மூன்றில் ஒரு பங்கைக்கூட விற்பனை செய்ய முடியாததால் பாதிப்படைந்தனர். அரசுக்கு சொந்தமான தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த அளவு தேன் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது.

இதனால் மத்திய அரசின் தேனீ பாதுகாப்பு முன்னேற்றக் குழு மூலம், இந்திய ராணுவத்துக்கு மார்த்தாண்டம் தேனை விநியோகம் செய்ய தேனீ விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சி மத்திய தேனீ பாதுகாப்பு முன்னேற்ற குழுவில் தமிழகத்திலிருந்து இடம் பெற்றுள்ள முன்னோடி தேனீ விவசாயி ஹென்றி மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹென்றி கூறும்போது, ‘‘1909-ம் ஆண்டு முதலே குமரி மாவட்டத்தில் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது உற்பத்தி செய்யப்படும் தேன் முழுவதையும் விற்பனை செய்ய முடியாததால் தேனீ விவசாயிகள் தொழிலை கைவிடும் நிலையில் உள்ளனர். தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கத்தால் கிலோ ரூ.130-க்கு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தேன் கொள்முதல் செய்யப்படுவதால், பலஆயிரம் டன் தேன் தேக்கம் அடை கிறது.

இதனால் வெளிச்சந்தைகளில் கிலோ ரூ.100-க் கும் குறைவாக விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக ஏழை தேன் உற்பத்தியாளர்கள் செலவை கூட ஈடுகட்ட முடியாமல் தவிக் கின்றனர். அதேநேரம் தேன் உற்பத்தியை பெரிய அளவில் செய்யும் முதலாளிகள் வெளிமாநிலங்களில் நல்லவிலைக்கு விற்பனை செய்கின்றனர்.

ராணுவத்துக்கு விநியோகம்

மார்த்தாண்டம் தேன் விவசாயத்தை மீட்டெ டுக்கும் வண்ணம் இந்திய ராணுவத்துக்கு தேன் விநியோகிக்க முடிவெடுத்துள்ளோம். ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகளில், மன வலிமையை ஏற்படுத்த முக்கிய உணவாக தேன் வழங்கப்படுகிறது. இதற்கான தேனை மார்த்தாண்டத்தில் இருந்து கொள்முதல் செய்யுமாறு பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்துள்ளேன். அனுமதி கிடைத்ததும் முதல் கட்டமாக 100 டன் தேன் வழங்க முடிவெடுத்துள்ளோம்’’ என்றார்.

ஆட்சியர் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் கூறும் போது, ‘‘மார்த்தாண்டத்தில் உற்பத்தி செய்யப் படும் தேனை இந்திய ராணுவத்துக்கு விற் பனை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம் ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. அப்போது, “அரசுத்துறை யால் ராணுவத்துக்கு நேரடியாக விற்பனை செய்வது சாத்தியம் இல்லை.

எனவே, தேனீ உற்பத்தியாளர்கள் அடங்கிய தனிக்குழு ஒன்று தொடங்கி அதன்மூலம் இந் திய ராணுவம் மட்டுமின்றி அதிகமாக தேன் கொள்முதல் செய்யும் பெரும் நிறுவனங்களுக் கும் விநியோகம் செய்யலாம். இதற்கு தேன் உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டியது அவசியம் என ஆட்சியர் வலியுறுத்தினார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x