

ப.முரளிதரன்
சென்னை
மின்னணு காப்பீடு கணக்கில் பாலிசி ஆவணங்களை மின்னணு முறையில் மாற்றி வைப்பதன் மூலம், அசல் ஆவணங்கள் தொலைந்தாலும் தொடர்ச்சியாக பிரீமியம் செலுத்தி பாலிசிகளை தொடர முடியும். இதனால், பாலிசி தாரர்களுக்கு இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மத்தியில் இன் றைக்கு காப்பீடு குறித்து அதிக ளவு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ள தால், ஏராளமானோர் காப்பீடு எடுக் கின்றனர். ஆனால், அவற்றுக்கு முறையாக பிரீமியம் கட்டி பாலிசி முதிர்வு காலம் வரை தொடர் கின்றனரா என்பது கேள்விக்குறி. பாலிசி எடுப்பவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் அதை பாதியிலேயே விட்டுவிடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஞாபக மறதி காரணமாக குறிப் பிட்ட இடைவெளியில் பிரீமியம் கட்டத் தவறுவது, அல்லது தவ ணைத் தொகை கட்ட வேண்டிய சமயத்தில் கையில் பணம் இல்லாமல் இருப்பது மற்றும் வீடு மாறும்போது காப்பீடு ஆவ ணங்களை தொலைத்து விடுவது என இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, மின்னணு காப்பீடு கணக்கு முறை (எலெக்ட்ரானிக் இன்சூரன்ஸ் அக்கவுண்ட்) அறி முகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் பாலிசியைத் தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடும் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, காப்பீடு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது பொதுமக்களிடையே காப்பீடு குறித்து அதிகளவு விழிப்பு ணர்வு ஏற்பட்டுள்ளது. அதேநேரத் தில் காப்பீடு எடுத்த பிறகு அதை முறையாக தொடர்வதில்லை. பணம் கட்டி பாதியிலேயே விட்டு விடுகின்றனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விதமாக, மின்னணு காப்பீடு கணக்கு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இன்சூரன்ஸ் ரெப் பாசிட்டரி நிறுவனத்தில் இதற்கான கணக்கைத் தொடங்கலாம்.
இதற்காக, காப்பீட்டு ஒழுங்கு முறை மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏ) அனுமதியுடன் நான்கு ரெப்பாசிட்டரி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. https://nir.ndml.in, https://www.cirl.co.in, https://www.kinrep.com, https://www.camsrepository.com என்ற இணையதள முகவரி மூலம் அந்த நிறுவனங்களில் இந்த மின்னணு காப்பீடு கணக்குத் தொடங்கலாம்.
ஒருவர் பாலிசி எடுக்கும் போது அதை மின்னணு முறையில் மாற்றி இந்த நிறுவனத்தில் மின் னணு கணக்கில் சேமித்து வைக் கப்படும். இதற்காக, இந்த நிறுவ னங்கள் எவ்வித கட்டணமும் பாலிசி தாரர்களிடம் இருந்து வசூலிப்ப தில்லை. இந்த மின்னணுக் கணக்கு வைத்திருக்கும் பாலிசிதாரர்க ளுக்கு ஒரு யூசர் நேம், பாஸ் வேர்டு வழங்கப்படும். இதன் மூலம், தங்களது பாலிசிகள் குறித்த தக வல்களை எப்போது வேண்டுமா னாலும் பார்த்துக் கொள்ளலாம்.
பாலிசிதாரரின் முகவரி, மொபைல் எண், இ-மெயில் மாறி இருந்தால் அதுகுறித்த தகவலை இந்நிறுவனத்திடம் தெரிவித்தால், அந்நிறுவனமே பாலிசிதாரர் அக் கவுன்ட்டில் இருக்கும் பாலிசிகளை வழங்கியுள்ள அனைத்துக் காப் பீடு நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவித்து தேவையான மாற் றங்களை செய்து தரும். இதன் மூலம், பாலிசிதாரரே ஒவ்வொரு காப்பீடு நிறுவனத்துக்கும் சென்று அலைய வேண்டிய அவசிய மில்லை.
மேலும், பாலிசிதாரர்கள் தங்களது பிரீமியத் தொகையை இந்த ரெப்பாசிட்டரி நிறுவனங்கள் மூலம் எளிதாக ஆன்லைனில் செலுத்தலாம். அதேபோல், காப்பீடு நிறுவனங்கள் பாலிசிதாரர்களுக்கு வழங்க வேண்டிய க்ளெய்ம் தொகையும், இந்நிறுவனங்கள் வாயிலாக பாலிசிதாரர்களின் வங்கிக் கணக்குக்கு ஆன்லைனில் செலுத்தி விடும். இதன் மூலம், பாலிசி ஆவணங்கள் தொலைந்து விட்டாலோ, பிரீமியம் கட்டத் தவறினாலோ அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
இவ்வளவு வசதி கொண்ட இந்த மின்னணு காப்பீட்டுக் கணக்குக் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத தால், தங்களது பாலிசிகளை தொடர முடியாமல் பாதியிலேயே கைவிடுகின்றனர். எனவே, இனி மேலாவது இதுகுறித்து முழுமை யாக அறிந்து கொண்டு பாலிசி தாரர்கள் பாலிசியை தொடர வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.