Published : 23 Sep 2019 07:20 AM
Last Updated : 23 Sep 2019 07:20 AM

தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட 26 லட்சம் பேரில் 2.30 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம்: தொற்றா நோய்களைக் கண்டறியும் திட்டத்தில் தகவல்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

தமிழகத்தில் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் தொகை சார்ந்த தொற்றா நோய் கண்டறியும் திட்டப் பரிசோதனை யில் 26 லட்சம் பேரில் 2.3 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதய நோய், நீரிழிவு நோய், சுவாசக் கோளாறு, வாய்ப் புற்று நோய், மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய்ப் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களால் இந்தியாவில் ஆண்டு இறப்பு சத வீதத்தில் 60 சதவீதம் பேர் இறக் கின்றனர். இதில் பெரும்பான்மை யானோர் இளம் மற்றும் நடுத்தர வயதுடையோர். எதிர்பாராத மரணமோ அல்லது உடல் உறுப்பு கள் செயலிழந்தாலோ அது பொரு ளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும் பத்தினரை வெகுவாக பாதிக்கிறது.

நடைமுறை வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், வயது மூப்பு, மரபணு, ஆரோக்கியமற்ற உணவு, சுகாதாரமற்ற பழக்க வழக் கங்கள் மற்றும் மாறிவரும் உணவு முறை உள்ளிட்டவற்றால் இந்த தொற்றா நோய்கள் ஏற்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங் களில் 30 வயதுக்கும் மேற்பட் டோருக்கு தொற்றா நோய் பரி சோதனை செய்யப்படுகிறது. அதில், குறைபாடுகள் கண்டறியப் படுவோரை மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கின்றனர்.

எனினும், சமுதாயத்தில் அனை வரும் அரசு மருத்துவமனைகளுக்கு வராத சூழ்நிலையும் உள்ளது. எனவே, அவர்களுக்கும் பரி சோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக மகளிர் திட்டத்துடன் இணைந்து மக்கள்தொகை அடிப் படையிலான தொற்றா நோய் பரி சோதனை திட்டம் சோதனை அடிப்படையில் தமிழகத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் சென்று பொது மக்களை சந்தித்து பரிசோதனை செய்கின்றனர். அதில், தொற்றா நோய்களுக்கான சாத்தியக்கூறு உள்ளோரை அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு பரிந்துரைக்கின்றனர். அனைத்து தரப்பினரும் இப்பரிசோதனை செய்துகொள்வதால் இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த சுகாதாரத் துறை திட்ட மிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட சுகாதார துணை இயக்கு நர் பரணிதரன் கூறியது:

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தொற்றா நோய்கள் பரி சோதனை செய்வதில் சிறந்த மாவட்டமாக புதுக்கோட்டை தேர்வு செய்து பாராட்டப்பட்டது. அதன் பிறகு, மக்கள்தொகை மற்றும் சமூகம் சார்ந்த தொற்றா நோய் கள் கண்டறியும் முன்னோடி திட் டம் புதுக்கோட்டை, பெரம்ப லூர், கிருஷ்ணகிரி, கரூர் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களிலும், சென்னை, திருநெல்வேலி மற்றும் கோவை ஆகிய மாநக ராட்சிகளிலும் தொடங்கியது.

இதன்படி, புதுக்கோட்டை மாவட் டத்தில் மே 2018-ல் இருந்து தொடர்ந்து 14 மாதங்களில் பரி சோதனை செய்யப்பட்டவர்களில் 74,361 பேர் உயர் ரத்த அழுத் தத்தாலும், 58,232 பேர் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோன்று, மே 2018-ல் இருந்து ஓராண்டில் தமிழகத்தில் உயர் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்ட 26 லட்சம் பேரில் 2.3 லட்சம் பேருக்கும், நீரிழிவு பரிசோதனை செய்யப்பட்ட 25.6 லட்சம் பேரில் 1.8 லட்சம் பேருக்கும் நோய்க் காரணிகள் இருந்தது உறுதி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மேலும், 2.4 லட்சம் பெண் களுக்கு கருப்பை வாய்ப் புற்று நோய், 2.3 லட்சம் பேருக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்யப் பட்டு தேவையானோருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இத்திட் டத்தில் உள்ள நிறைகுறைகளை கணக்கில் கொண்டு தமிழகம் முழுவதும் விரைவில் விரிவு படுத்த சுகாதாரத் துறை திட்ட மிட்டுள்ளது.

நோயின் பின்விளைவுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள களப்பணியாளர்களின் பரிந்துரையை ஏற்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று போதிய பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண் டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x