Published : 22 Sep 2019 08:40 AM
Last Updated : 22 Sep 2019 08:40 AM

திமுக ஆதரவுடன் களமிறங்கும் காங்.: நாங்குநேரியில் ஆளுங்கட்சியை எதிர்கொள்கிறது

அ.அருள்தாசன்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த எச்.வசந்தகுமார், மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இங்கு, அக்.21-ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுகவை எதிர்த்து போட்டியிடுவது திமுகவா அல்லது காங்கிரஸா என்ற குழப்பம் நீடித்த நிலையில், இத்தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு உள்ளூர் மற்றும் வெளியூர் பிரமுகர்கள் பலரும் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாளை யங்கோட்டை மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தாலுகாக்களுக்கு உட்பட்ட பகுதிகளை, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதி உள்ளடக்கியுள்ளது. இந்துக்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் நாடார் சமுதாயத்தினர் அதிகப்படியாக உள்ளனர். அடுத்ததாக ஆதிதிராவிடர், தேவர், யாதவர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கிறார்கள். ஏர்வாடி, களக்காடு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம்.

பொருளாதார பலம் முக்கியம்

இத்தொகுதியில் கட்சி செல்வாக்கை விட, ஜாதி அடிப்படையிலேயே வாக்குகள் அதிகம் பிரிகின்றன. பெரும்பாலும் நாடார் சமூகத்தினரையே இத்தொகுதியில் அரசியல் கட்சிகள் வேட்பாளராக அறிவிக் கின்றன.

ஆளுங்கட்சி என்ற அசுர பலத்துடன் களம்காணும் அதிமுகவை சமாளிக்க, பொருளாதார பலம் உள்ள ஒருவரையே காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவிக்கும்.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியிலும், 2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியிலும் ஆளும்கட்சியை எதிர்த்து வெற்றிபெற்றவர் எச்.வசந்தகுமார். இம்முறையும் நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சி அவரையே சார்ந்திருக்கும் என தெரி கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x