விக்கிரவாண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே களப்பணியை தொடங்கிய கட்சிகள்

விக்கிரவாண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே களப்பணியை தொடங்கிய கட்சிகள்
Updated on
1 min read

எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த ராதாமணி கடந்த ஜூன் 14-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கு வரும் அக்.21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலை மனதில் கொண்டு விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த சில நாட்களாக அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. நேற்றும் விக்கிரவாண்டியில் சமுக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு நடைபெற்று கொண்டிருக்கும்போதே தேர்தல் அறிவிப்பு வெளியானதால் அவசர அவசரமாக நிகழ்ச்சி முடிக்கப்பட்டு மீதமிருந்த 2 நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன.

அதிமுக சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பிருந்தே தொகுதியில் உள்ள கிளை செயலாளர் முதல் மாவட்ட நிர்வாகி வரை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராதாமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் வேலுவைவிட 6,912 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தனித்து போட்டியிட்ட பாமக 41,428 வாக்குகளை பெற்றது. தற்போது அதிமுக கூட்டணியில் பாமக இருப்பதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது போல தோன்றினாலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிகுமார் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றபோது இத்தொகுதியில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட கூடுதல் வாக்குகளை பெற்றார்.

2 லட்சத்து 23 ஆயிரத்து 387 வாக்காளர் களைக் கொண்ட தொகுதியில், நீண்ட நாள் கோரிக்கைகளான அன்னியூர் தீயணைப்பு நிலையம், உமையாள்புரத்தில் போக்கு வரத்து கழக பணி மனை, நல்லா பாளை யத்தில் இருந்து பனமலை, கஞ்சனூர் வழி யாக விக்கிரவாண்டிக்கு பேருந்து சேவை, பழுதடைந்த சாலை மேம்பாடு, குடிநீர் தேவை கள், நந்தன் கால்வாய் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றும் கட்சிக்கே மக்கள் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in