

கோவை
டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற் கொலையில் யார் தூண்டுதலும் இல்லை என கோவை நீதிமன் றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங் கோட்டில் டிஎஸ்பி.யாக பணியாற்றி வந்த விஷ்ணுபிரியா, கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், 'குற்றவாளிகள் யாரும் இல்லை. இந்த வழக்கை கைவிடுவதாக' கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிஐ கடந்தாண்டு ஏப்ரல் 16-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி, வழக்கை மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ அறிக்கையில் உள்ள சில வற்றை சுட்டிக்காட்டி, சிபிஐ தனது விசாரணையை தொடரவும், அறிக்கையில் எழுந்துள்ள சந்தே கங்களுக்கு பதில் அளிக்கவும், 6 மாதங்களில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்நிலையில், விசாரணை முடித்து, கடந்த ஆக. 28- 2-வது அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. அதில், விஷ்ணுபிரியா தற்கொலையில் யாருடைய தூண் டுதலும் இல்லை என தெரிவிக்கப் பட்டது. சிபிஐ-யின் 2-வது அறிக் கைக்கு பதில் அளிக்க ஆஜராகும் படி, கோவை தலைமை குற்ற வியல் நீதிமன்றத்திலிருந்து விஷ்ணுபிரியாவின் தந்தைக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி, நேற்றுமுன்தினம் நீதிமன்றத்தில் ஆஜராக விஷ்ணு பிரியாவின் தந்தை வந்த நிலை யில், நீதிபதி இல்லாததால் வழக்கு அக்10-க்கு ஒத்திவைக்கப்பட்டது.