

சென்னை
தமிழகத்தில் வரும் 24-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களி லும் மழை அதிகரிக்க வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கள் கூறியதாவது:
தென்னிந்திய பகுதியில் நிலவி வந்த, கிழக்கு மற்றும் மேற்கு திசைக் காற்றுகள் சந்திக்கும் பகுதி வலுவிழந்துவிட்டது. தற் போது வடக்கு ஆந்திரா அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங் களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப் புள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவா ரூர், நாகப்பட்டினம், புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஓமலூர், திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 6 செமீ, மேட்டூரில் 4 செமீ, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 3 செமீ, திருவாரூர் மாவட்டம் முத்து பேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதி யில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதால், 24-ம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை அதிக ரிக்க வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.