

சென்னை
முதலமைச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தில் இது வரை 38.49 லட்சம் மக்கள் பயன டைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட் டத்துடன் (காப்பீட்டுத் திட்டம்), தமிழகத்தின் முதலமைச்சரின் விரி வான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் இணைந்து ஓராண்டு நிறைவடைந் துள்ளது. இதை முன்னிட்டு தமிழக சுகாதாரத் துறை சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் சென்னை பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் நேற்று காலை நடைபெற்றது. 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடைபய ணத்தை தொடங்கி வைத்த சுகா தாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், விழிப்புணர்வு மணற் சிற்பத்தினை பார்வையிட்டார். விழிப்புணர்வு பேரணியில் அமைச் சருடன் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் கணேஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், பொது சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது அமைச்சர் சி.விஜய பாஸ்கர் பேசியதாவது: தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தின் ஆண்டு வருவாய் ரூ.72,000-க்கும் குறைவாக உள்ள 1.58 கோடி குடும்பங்கள் இத்திட்டம் மூலம் பயன் பெறுகின்றனர். ஆண்டு ஓன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை வழங்கப் படுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட 990 மருத்துவ மனைகளில் கடந்த 2012 முதல் இதுவரை ரூ.6,279 கோடி காப்பீடு தொகையின் மூலம் 38.49 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
தற்போது, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்துடன் இணைந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஓராண்டு நிறைவு செய்துள்ளதை, மத்திய அரசு நாடுமுழுவதும் செப். 15-ம் தேதி முதல் அக். 2-ம் தேதி வரை 15 நாட்கள் கொண்டாட முடிவு செய்துள்ளது.
அதன்படி, அனைத்து மாவட்டங் களிலும் மாவட்ட நிர்வாகம் மூலம் 15 நாட்களுக்கு மருத்துவ முகாம், தொற்றாநோய் முகாம், நடைபயணம், கல்லூரி மாணவர் களை பயன்படுத்தி சுவர் ஓவியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது. அக். 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று சிறப்பு கிராம சபை கூட்டங்களிலும் இத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.