

சென்னை
வங்கிகள் இணைப்புக்கு எதிராக வும், ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்கக் கோரியும் வரும் 26, 27 தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தமிழக செயலாளர் ஆர்.சேகரன் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நடப்பு ஊதிய ஒப்பந்தம் காலா வதியாகி 23 மாதங்கள் ஆகியும் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை விரைந்து நடத்தாததைக் கண்டித்தும் வரும் 26, 27 தேதிகளில் தேசிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது. இதில், வங்கித் துறையில் உள்ள ஏறத்தாழ அனைத்து அதிகாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 4 அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்களைச் சேர்ந்த 4 லட்சம் அதிகாரிகள் பங்கேற்பார்கள். தமிழகத்தில் மட்டும் 40 ஆயி ரம் வங்கி அதிகாரிகள் கலந்து கொள்வர்.
இப்போராட்ட நாளில், நாடு முழுவதும் தினமும் 48 ஆயிரம் கோடி காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் கோடி மதிப்புள்ள காசோலை பரிவர்த்தனை பாதிக்கும்.
வங்கிகளை இணைக்கும் போது ஏராளமான வங்கிக் கிளை கள் மூடப்படும். அதனால் சாதாரண மக்களுக்கு விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட் டவை கிடைக்காமல் போகும். வங்கிகளைத் தனியார்மயமாக்கும் நோக்கத்தில்தான் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படு வார்கள். செல்வந்தர்கள் பயன் பெறுவார்கள். எனவே, வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை உட னடியாகக் கைவிட வேண்டும்.
இவ்வாறு சேகரன் கூறினார்.
அகில இந்திய வங்கி அதிகாரி கள் சங்க தமிழக செயலாளர் டி.எஸ்.கணேசன், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் அமைப்பு தமிழக செயலாளர் சூர்யநாராயண ராவ், வங்கி அதிகாரிகள் தேசிய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.