

சென்னை
சினிமா மூலம் கலைகளை வளர்த் ததில் வைஜெயந்திமலா பாலி முக்கிய பங்காற்றியுள்ளதாக ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை சார்பில் நவராத்திரி இசை விழாவைக் கொண்டாடும் வகை யில் கடந்த 2011-ம் ஆண்டு முதல், இசை, நாட்டியம் உள்ளிட்ட பல் வேறு கலைகளில் சிறந்து விளங் கும் கலைஞர்களுக்கு ‘சரஸ்வதி புரஸ்காரம்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
பிரபல நடன கலைஞர் வைஜெயந்திமாலா பாலிக்கு இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அறக்கட்டளை அரங்கில் நேற்று நடைபெற்றது. அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று விருதை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழக பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், ஓர் அறிவியல் பூர்வமான நடனமாகும். 2-ம் நூற் றாண்டு கால தமிழ் இலக்கியங் களில் கூட பரதநாட்டியம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிவு, இசை, கலையின் கட வுளாக சரஸ்வதி உள்ளார். அவர் பெயரில், சி.பி.ராமசாமி அறக் கட்டளை விருது வழங்குவது பாராட்டுக்குரியது. இந்த ஆண்டுக் கான விருது, பரதநாட்டிய கலை யில் புகழ்பெற்று விளங்கும் வைஜெயந்திமாலா பாலிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவர் திரைப்படங்கள் மூலம் கலை களை வளர்ப்பதிலும், அதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங் காற்றியுள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், சி.பி.ராமசாமி ஐயர் அறக்கட்டளை தலைவர் நந்திதா கிருஷ்ணா, கவுரவ செயல் தலைவர் எம்.பார்கவி தேவேந்திரா, அறங்காவலர் சுமதி கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.