Published : 22 Sep 2019 08:02 AM
Last Updated : 22 Sep 2019 08:02 AM

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி 150 அடி உயர நினைவு கொடி கம்பம்

சென்னை 

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி சார்பில் சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர நினைவு கொடிக் கம்பம் அமைக்கப்படு கிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. 4 டன் எடைகொண்ட இந்த கொடிக் கம் பம் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படவுள் ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்கபாலு, திருநாவுக்கரசர், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “காந்தி இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே புதிய கொள்கையை வகுத்து கொடுத்தவர். மதம், சாதி, நிறம், மொழி யின் பெயரில் மனிதர்களை பிரிக்க கூடாது என்ற அவரின் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 30-ம் தேதி கோவையில் நடக்கவுள்ளது. இதில், பல்வேறு முக்கியமான விவாதங்கள் நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x