Published : 22 Sep 2019 07:59 AM
Last Updated : 22 Sep 2019 07:59 AM

கோயம்பேடு மொத்த விலை சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.50 ஆக உயர்வு: விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகளில் ரூ.45-க்கு விற்பனை

சென்னை

வெளி மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் வரத்து குறை வால் கோயம்பேடு மொத்தவிலை சந்தையில் அதன் விலை நேற்று கிலோ ரூ.50 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுக்கு 21 மில்லியன் டன் பெரிய வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டி லேயே ஆண்டுக்கு 6.5 மில்லியன் டன் உற்பத்தியுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்திலும், 2.8 மில்லியன் டன் உற்பத்தியுடன் மத் திய பிரதேசம் 2-ம் இடத்திலும், கர்நாடக மாநிலம் 2.7 மில்லியன் டன் உற்பத்தியுடன் 3-ம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் ஆண்டுக்கு 56 ஆயிரம் டன் மட்டுமே உற் பத்தி செய்யப்படுகிறது. இதனால் கோயம்பேடு சந்தையை பொறுத்த வரை மகாராஷ்டிரா, கர்நாட கம் ஆகிய மாநிலங்களை நம்பி இருக்க வேண்டியுள்ளது. இம் மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்ததால், கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காய விலை கடந்த ஒரு மாதமாக உயர்ந்து வருகிறது. நேற்று மொத்த விலை விற்பனையில் கிலோ ரூ.50 ஆக உயர்ந்திருந்தது.

சென்னையில் சில்லறை காய் கறி விற்பனை சந்தையான திரு வல்லிக்கேணி ஜாம்பஜாரில் வெங் காயம் கிலோ ரூ.60-க்கு விற்கப் பட்டு வருகிறது. டியூசிஎஸ் சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.45-க்கு விற்கப்பட்டு வருகிறது. இது குறித்து டியூசிஎஸ் அதிகாரி கள் கூறும்போது, ‘‘சென்னை மாநகரில் வெங்காய விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பண்ணை பசுமை கடைகளில் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றனர்.

தக்காளி கிலோ ரூ.15

கோயம்பேடு காய்கறி சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, முள்ளங்கி, புடலங்காய் கிலோ தலா ரூ.15, சாம்பார் வெங் காயம் ரூ.50, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, அவரைக்காய், வெண்டைக்காய், பாகற்காய் ஆகி யவை தலா ரூ.20, பீன்ஸ் ரூ.45, முட்டைக்கோஸ் ரூ.10, கேரட் ரூ.35, பீட்ரூட் ரூ.18, முருங்கைக்காய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.32 என விற்கப்பட்டு வருகிறது.

வெங்காய விலை உயர்ந்து வருவது தொடர்பாக கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மகாராஷ் டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங் களில் கனமழை பெய்து வந்தது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, பெரிய வெங்காய பயிர்கள் அழிந்தன. கையிருப்பில் உள்ள வெங்காயம் மட்டுமே தற்போது குறைந்த அளவில் விற்பனைக்கு வருகிறது. அதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x