Published : 22 Sep 2019 07:57 AM
Last Updated : 22 Sep 2019 07:57 AM

ஆக்கிரமிப்புகள், குப்பைக் கழிவுகளை அகற்றிய நிலையில் சுற்றுச்சூழல் சீரமைப்பால் புதுப்பொலிவு பெற்ற கூவம்

சென்னை

சென்னையில் ஒருங்கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ஆக்கிரமிப்புகள், குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்ட நிலையில் அந்த ஆறு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

சென்னையில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில், திரு வள்ளூர் மாவட்டம் கூவம் என்ற கிராமத்தில் கூவம் ஆறு உருவாகிறது. இது சத்தரை கிராமத்தில் தொடங்கி, பூந்தமல்லி வழியாக, சென்னை மாநகருக்குள் நொளம்பூர், சூளைமேடு, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளை கடந்து, சிந்தாதிரிபேட்டையில் 2 ஆக பிரிந்து, நேப்பியர் பாலம் அருகில் ஒன்று சேர்ந்து வங்கக் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 65 கிமீ.

மக்கள்தொகை அதிகம் உள்ள மாநகரப் பகுதியில் இந்த ஆறு பாய் வதால், கடுமையாக மாசடைந் தது. ஆற்றின் கரைகள் ஆக்கிரமிக் கப்பட்டு, மழைநீர் கொள்திறன் குறைந்தது. இந்நிலையில் ஒருங் கிணைந்த கூவம் ஆறு சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியது. அதற்காக சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக் கட்டளை உருவாக்கப்பட்டு, ரூ.604 கோடி மதிப்பீட்டில் முதற்கட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

பொதுப்பணித் துறை சார்பில் தேவையான இடங்களில் சுமார் 22 கிமீ தூரத்துக்கு தூர் வாரப் பட்டு, ஆற்றின் அகலம், வெள்ளநீர் கொள்திறன் அதிகரிக்கப் பட்டுள்ளது. கரைகள் பலப்படுத்தப் பட்டுள்ளன. மாநகராட்சி சார்பில் ஆற்றின் கரையோரம் கொட்டப் பட்டிருந்த 16 ஆயிரத்து 824 டன் குப்பைகள் மற்றும் 76 ஆயி ரத்து 430 டன் கட்டிடக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. 8 இடங்களில் மிதவை தடுப்பான்கள் அமைக்கப் பட்டு, ஆற்றில் மிதந்து வந்த 28 ஆயிரத்து 850 டன் கழிவு பொருட் கள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், ஆற்றில் விடப்படும் கழிவுநீரை இடைமறித்து, மாற்று வழி அமைத்தல், முன்மாதிரி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஏற்ப டுத்தல் போன்ற பணிகள் நடை பெற்று வருகின்றன. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து வசித்து வந்த 8 ஆயிரத்து 166 குடும்பங்கள், பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மறு குடியமர்வு செய்யப்பட்டனர்.

மேற்கண்ட பணிகள் முடிக்கப் பட்டுள்ள நிலையில் ஆற்றை மீண்டும் மாசுபடுத்தாத வகையில், மாநகராட்சி சார்பில் ஆற்றின் கரையோரங்களில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசின் பல்வேறு துறைகள் ஒருங் கிணைந்து மேற்கொண்ட பணிக ளால் கூவம் ஆற்றின் கரைகளில் தற்போது ஆக்கிரமிப்புகள், குப்பை கள் மற்றும் கட்டுமானக் கழிவுகள் இல்லை. நீரில் மிதந்து வரும் ஆகாயத்தாமரை போன்ற கழிவு களும் இல்லை. இதன் காரணமாக கூவம் ஆறு தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன், கண்களுக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில், ஆற்றின் கரையோரங்களில் விரைவில் நடைபாதைகள், பூங்காக் கள், மிதிவண்டித் தடங்கள் போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வசதிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. அனைத்துப் பணிகளும் நிறைவடையும்போது, அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகை யில் இருக்கும் என்று சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x