Published : 22 Sep 2019 07:48 AM
Last Updated : 22 Sep 2019 07:48 AM

பட்டு, பருத்தி ரகம் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு உள்ளிட்டவற்றில் சிறந்த நெசவாளர்களுக்கு அரசின் விருது, பரிசுகள்: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி வழங்கினார்

கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்த திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். உடன் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலாளர் சண்முகம்.

சென்னை

தமிழகத்தில் 27 கைத்தறி நெசவாளர் களுக்கு சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர், திறன்மிகு நெசவாளர் விருதுகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசு கடந்த 2013-14-ம் ஆண்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அதிக உற் பத்தி மற்றும் விற்பனையில் குறிப் பிடத்தக்க வகையில் பங்களிப் பையும் நல்கிய சிறந்த நெசவாளர் களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான சிறந்த நெச வாளருக்கான விருதுடன் ரூ.1 லட் சம் ரொக்கப் பரிசும் சான்றித ழும் வழங்கும் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை மேலும் விரிவு படுத்தி அதிக எண்ணிக்கையிலான நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான கைத்தறித் துறை மானிய கோரிக் கையின்போது அறிவிப்பு வெளி யிடப்பட்டது.

இதன்படி பட்டு மற்றும் பருத்தி ரகம் உற்பத்தி செய்யும் நெசவாளருக்கு முதல் பரிசாக தலா ரூ.1 லட்சம், 2-ம் பரிசு ரூ.75 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதேபோல் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வடிவமைப்பாளர்களை ஊக்குவிக்கும்விதமாக சிறந்த வடிவமைப்பாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், 3-ம் பரிசாக 5 ஆயிரம் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2019-20-ம் ஆண் டுக்கு மாநில அளவில் அதிக உற்பத்தியும் விற்பனையும் பெற் றுத் தந்த பட்டு ரகத்துக்கான சிறந்த கைத்தறி நெசவாளருக்கான முதல் பரிசை சேலம் சரகம் ஜே.ஓ.கொண்டலாம்பட்டி பருத்தி மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.சுப்பிர மணிக்கும் பருத்தி ரகத்துக்கான முதல் பரிசு பரமக்குடி கலைமகள் பருத்தி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் கே.கே.பாண்டுரங்க னுக்கும் தலா ரூ.1 லட்சம் காசோ லையை முதல்வர் பழனிசாமி வழங்கினார்.

அதேபோல், 2-ம் பரிசாக ஆர்.பாபு (பட்டு), எஸ்.மல்லிகா (பருத்தி) ஆகியோருக்கு தலா ரூ.75 ஆயிரமும் 3-ம் பரிசாக எஸ்.கே.சரவணன், ஆர்.ராதாமணி ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிர மும் வழங்கப்பட்டது.

இதுதவிர சிறந்த வடிவமைப் பாளருக்கான முதல் பரிசை திருபு வனம் நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் எம்.கார்த்திகே யனுக்கும், சிறந்த வடிவமைப்பு மற்றும் தரத்துடன் கூடிய கைத்தறி ரகங்களை நெசவு செய்ததற்காக 20 திறன்மிகு நெசவாளர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரத் துக்கான காசோலை சான்றிதழ் களையும் முதல்வர் வழங்கினார். இதன்மூலம் மொத்தம் 27 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.6 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளை அவர் வழங்கினார்.

மேலும், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1 கோடியில் கட்டப்பட்டுள்ள திருச்செங்கோடு சரக உதவி இயக்குநர் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். அண்ணா, பாரதி, கன்னி யாகுமரி மாவட்டம், ராமநாத புரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை களில் பணிக்காலத்தில் மரண மடைந்த நிரந்தர பணியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 5 வாரிசு களுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கான பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, ஓ.எஸ்.மணியன், தலைமைச் செயலர் கே.சண்முகம் மற்றும் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x